கள்ளச்சாராய உயிரிழப்புகள் : டிஜிபி உத்தரவு.! 4 மாவட்டத்தில் 202 பேர் அதிரடி கைது.! 

கள்ளச்சாராய வழக்கில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக , தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், மாநகர் காவல் ஆணையர்கள், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அந்தந்த மாவட்டங்களில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில், விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கள்ளச்சாராய வியாபாரிகள் 203 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது  வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சுமார் 5900 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.