மழை காரணமாக 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

தொடர் மழை காரணமாக 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே திண்டுக்கல், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமண ஜோடி படுகொலை- மேலும் 3 பேர் கைது..!

தூத்துக்குடியில் காதல் திருமண செய்த மாரிச்செல்வம் – கார்த்திகா வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கார்த்திகா  பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மாரி செல்வம் பெற்றோர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், கடந்த 30-ஆம் தேதி கோவில்பட்டி … Read more

ஐபிஎல் 2024: ஏலத்திற்கு முன் முக்கிய ஆல்ரவுண்டரை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்..!

ஏலத்திற்கு முன்னதாக ரொமாரியோ ஷெப்பர்ட்-யை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி 50 லட்சத்துக்கு வாங்கி அணியில் சேர்த்தது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஆயத்த பணிகளை மும்பை இந்தியன்ஸ் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு ஏலத்திற்கு முன் வீரர்களை வாங்க செய்யலாம். இதனால், மும்பை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட்-யை 50 லட்சத்துக்கு வாங்கி அணியில் சேர்த்தது. Know more about our new 𝗢𝗡𝗘 𝗙𝗔𝕄𝕀𝗟𝗬 member: https://t.co/XOAEAdJHRP#OneFamily … Read more

கனமழை எதிரொலி- நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தென்காசியில் உள்ள அனைத்து  பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கி விட வேண்டாம் எனவும் தொடர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரியில் … Read more

நெதர்லாந்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி..!

ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34-ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக  வெஸ்லி பாரேசி, … Read more

புழல் சிறையில் இருந்து வந்த யூடியூபர் டி.டி.எஃப் வாசன்..!

புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் வெளியே வந்தார். டி.டி.எஃப் வாசன் பைக் சாசகம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை தன் பக்கம் இழுத்தவர். இதற்கிடையில் “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது  உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். டிடிஎப் … Read more

மார்க்கெட் இல்ல ஆனா கோடிகளில் புரளும் நடிகை தமன்னா! எப்படி தெரியுமா?

TamannaahBhatia

நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவரை பிரபலப்படுத்தியதோ இல்லையோ அவர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’  பாடலில் நடனம் ஆடியது அவரை எங்கயோ கொண்டு சென்றது என்றே சொல்லலாம். இந்த பாடல் வெளியான சமயத்தில் இருந்து தமன்னா தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆனாலும், அவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவே இல்லை. தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தமன்னா ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும், … Read more

#BREAKING: சசிகலாவை நீக்கியது செல்லும் – ஓ.பன்னீர் செல்வம்..!

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் அதிமுக … Read more

சத்தீஸ்கரில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12000 ரூபாய் – பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீடு!

bjp

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்தாண்டு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியும் சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதான அர்ஷுயல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி, பிரச்சாரம் உள்ளிட்டவையில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளது. இந்த … Read more

புகாரின் அடிப்படையில் தான் சோதனை நடைபெறுகிறது – அண்ணாமலை

K Annamalai

திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எ.வ.வேலு அவர்களுக்கு எப்போதோ ரெயிடு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு ரெயிடு நடத்துகிறார்கள். இந்தியாவில் எங்கையும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது. திமுகாவில் அரசியல்வாதி என்கின்ற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களுடைய அதிகாரத்தை அவராக பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள். இதில் ரெயிடு நடந்தா என்ன தப்பு. புகாரின் அடிப்படையில் தான் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கன்னியாகுமரி … Read more