12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரத்தக்கறையுடன் அரை நிர்வாணமாக சாலையில் சென்ற அவலம்!

half-naked and bleeding

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயது சிறுமிரத்தக்கறையுடன் அரை நிர்வாணமாக வீதியில் உதவி கோரி அலைந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஈடுபடுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினி என்றே பகுதியில் 12 வயது சிறுமி, அரை நிர்வாணமாகவும், இரத்தக்கரை படிந்த உடையில் தெருக்களில் சென்று உதவி கேட்டும், யாரும் கண்டு கொள்ளாத அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உஜ்ஜயினி நகரின் தண்டி ஆசிரமம் அருகே வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் … Read more

Leo Update: இது தான் அதிரடி!! ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசு அளித்து…கொண்டாடி கொளுத்தும் லியோ டீம்!

Leo Second Single

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘லியோ’. தினமும் இந்த படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வராதா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று ஓர் அதிர்ச்சி செய்தி வெளியானது. செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை … Read more

Google’s 25th birthday: கேரேஜ் முதல் கண்டங்கள் வரை..! கூகுளின் 25 ஆண்டுகால சாதனை பயணம்.!

Google 25th Birthday

உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் ஆன கூகுள், அதன் 25 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக சிறப்பு டூடுல் ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டாடி வருகிறது. அதன்படி, ‘Google’ என்று இருக்கும் டூடுல் ஆனது ‘G25gle’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் உருவாக்கப்பட்டதில் இருந்து 1000ற்கும் மேற்பட்ட டூடுல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சரியாக 1998ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி … Read more

ஆறு புதிய டோர்னியர் டூ-228 விமானங்களில் முதல் விமானத்தை அறிமுகப்படுத்திய இந்திய விமானப்படை.!

Dornier Do-228

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த ஆறு புதிய டோர்னியர் டூ-228 விமானங்களில் முதல் விமானத்தை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 10ம் தேதி டோர்னியர் டூ-228 விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் ஆனது 667 கோடி ரூபாய் மதிப்பில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆறு டோர்னியர் டூ-228 விமானங்களை … Read more

புரட்டாசி மாத ஸ்பெஷல்..! மீன் வறுவலை விட அட்டகாசமான சுவையில் கருனை கிழங்கு வறுவல் இதோ..!

KARUNAI KILANGU

புரட்டாசி மாதம் என்றாலே பெரும்பாலானோர் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை தவிர்த்து விடுவர். இந்த புரட்டாசி மாதத்தில் காய்கறி உணவுகளை தான் செய்து சாப்பிடுவர். ஆனால், மாமிச பிரியர்கள் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை சாப்பிடாமல், இந்த புரட்டாசி மாதத்தை கடப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு,  மீன் வறுவலை மிஞ்சும் அட்டகாசமான சுவையில் கருனை கிழங்கு வறுவல் செய்து கொடுக்கலாம். கருனை கிழங்கின் பயன்கள்  இந்த கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C  போன்ற சத்துக்கள் … Read more

அட்டகத்தி தினேஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘லப்பர் பந்து’ படத்தின் புதிய லுக்!

Lubber Pandhu

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் ‘லப்பர் பந்து’ படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, லப்பர் பந்து’ படத்தின் அவரது தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர். #AttakathiDinesh Anne, Pirandha naal Vaazhthukkal, endha character kuduthalum veluthu vanguriyenne ! #LubberPandhu kalathil sandhippom ❤️???? Ungalukku en #AnbuMattume @tamizh018 @Prince_Pictures pic.twitter.com/lVXcolxA0F — Harish Kalyan (@iamharishkalyan) September … Read more

விநாயகர் சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி 4 குழந்தைகள் பலி.!

children drowned

விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அவ்வாறு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சில குறிப்பிட்ட நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அப்படி கரைக்கப்படும்போது பல அசாம்பாவிதங்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் போது நான்கு குழந்தைகள் நீரில் … Read more

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் நியமனம்!

admk office

அதிமுகவில் புதிய புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் மற்றும் கொள்கை பரப்பு இணை செயலாளரை நியமனம் செய்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ஜெ.சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்செல்வன், கும்பகோணம் மாநகர செயலாளராக ராம.ராமநாதன், தஞ்சை மாநகர செயலாளராக சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக சு.ரவி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக … Read more

காலாண்டு விடுமுறைக்கு பின் அக்.3ல் பள்ளிகள் திறப்பு!

Tamilnadu School Students

தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செப்.19ம் தேதி தொடங்கிய பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தோ்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இதற்கு முன்னதாக செப்.15-ஆம் தேதி முதல் 11, 12ம் வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டு தோ்வு நடைபெற்றது. இந்த நிலையில், 2023-24ஆம் கல்வியாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் அக்டோபர் 3-ம் தேதி முதல் … Read more

அக்.1 முதல் 6 மாதங்கள்.. மணிப்பூர் மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!

Manipur tension

மணிப்பூர் மாநிலம் 6 மாதங்களுக்கு பதற்றம் நிறைந்த மாநிலமாகவே கருதப்படும் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மணிப்பூர் கடந்த மே மாதம் முதல் இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்து நாட்டையே உலுக்கியது. அதிலும், இரு பெண்களுக்கு ஒரு கொடூர கும்பலால் நேர்ந்த துயரம் பலரது இதயத்தை நொறுக்கியது. இந்த கலவரமானது, மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி இன பிரிவில் சேர்க்க கோரியபோது, அதற்கு பழங்குடியின மக்களான குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாதால் … Read more