ஹெட் மற்றும் ஸ்மித் அபார ஆட்டம்..! முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 327 ரன்கள் குவிப்பு.!

WTC Final Day 1

இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 327/3 ரன்கள் குவிப்பு. இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கவாஜா டக் அவுட் ஆகி வெளியேற, அதன் பின் வார்னர் 43 ரன்கள் மற்றும் லபஸ்சன் 26 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். … Read more

வருவாய் துறையில் பதிவாளர் வேலை..! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!

MinistryofFinance

நிதி அமைச்சகத்தின் (Ministry of Finance) கீழ் உள்ள வருவாய் துறையில் (Department of Revenue) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருவாய் துறையில் பணி புரிவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதவியின் விவரம்:  வருவாய் துறை, புதுடெல்லியின் கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பதிவாளர் (Registrar) பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள … Read more

இந்தியாவிலும் அறிமுகம்! இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக்… மாதம் ரூ.699.!

Meta Blue

இந்தியாவில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக் வசதி பெற மாதத்திற்கு ரூ.699 திட்டம் அறிமுகம். மெட்டா நிறுவனம் அதன் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் (Meta Verified) சேவையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இன்ஸ்டா மற்றும்  ஃபேஸ்புக்கில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கிற்கான ப்ளூடிக்கை பெற உதவும் கட்டண சலுகையை மெட்டா நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் களில் இந்த ப்ளூ டிக் பெற மாதத்திற்கு ரூ.699 … Read more

பெரியாரின் கனவை நனவாக்க குறியாக இருந்தவர் கலைஞர் – திருமாவளவன்

thirumavalavan

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் வேறெந்த மாநிலத் தலைவர்களும் நினைத்துக்கூட பார்க்காத சாதனை என திருமாவளவன் பேச்சு.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் எம்.பி. அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டை காப்பற்ற வேண்டும் என்றால் சனாதன சக்திகள் வெளியே செல்ல வேண்டும்; பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே அனைவரையும் ஒன்று சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் … Read more

WTC Final AUS vs IND: டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்…  

Head 100

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதத்தை நிறைவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ஹெட் 100* ரன்கள் மற்றும் ஸ்மித் 53*ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பாக 157* ரன்கள் குவித்து விளையாடி வருகின்றனர்.

ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து…! 6 பேர் உயிரிழந்ததாக தகவல்..!

trains cancelled

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்.  ஒடிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற அகோரமான ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக … Read more

16,000 பேருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

death

இதுவரை சுமார் 16,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் காந்தி மாரடைப்பால் மரணம்.  குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவர் காந்தி, இவருக்கு வயது 41. இவர் பிரபலமான இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார். இதுவரை சுமார் 16,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் வழக்கம் போல் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று உறங்கியவர் மறுநாள் காலை சுயநினைவின்றி இருந்துள்ளார். மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே … Read more

TEA Break Day1: டிராவிஸ் ஹெட் அரைசதம்… ஆஸ்திரேலியா அற்புதமான பேட்டிங், 170/3 ரன்கள் குவிப்பு.!

Aus TeaBreak Bat

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தேனீர் இடைவேளை முடிவில் 170/3 ரன்கள் குவிப்பு. இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு பிறகு விக்கெட் எதுவும் இழக்காமல் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் பொறுமையாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றனர். டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருக்கு துணையாக ஸ்மித்தும் சேர்ந்து அணிக்காக 85 … Read more

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு அபராதம் விதிப்பு..!

fine

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவு.  கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் திடீரென்று கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், முறையான இருக்காய் வசதி இல்லாத வணிக நிறுவனம் உட்பட 16 கடைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக … Read more

மத்திய அமைச்சரவை ஒப்புதல்… இனி நாடு முழுவதும் 4G/5G சேவைகளை வழங்கும் பிஎஸ்என்எல்.!

BSNL

4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை பிஎஸ்என்எல்-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இறுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இனி அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நுகர்வோர்களுக்கு தரமான சேவையில் மட்டுமல்லாமல், மலிவு விலையில் அழைப்புகள் மற்றும் டேட்டா திட்டத்தையும் வழங்கும். மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதலுக்கு பிறகு பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் 4G மற்றும் 5G சேவைகளை வழங்க அனுமதிக்கும் என்று அமைச்சரவை … Read more