எலான் மஸ்க்கை பாராட்டிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்”முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின் கணக்கை ரத்து செய்ததால் ஏற்பட்ட அவருக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய” வலியுறுத்தினார். 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்திற்குப் பிறகு டிரம்ப் ட்விட்டரில் இருந்து தடை செய்யப்பட்டார். இதுகுறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ட்விட்டரை எலன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ததை பாராட்டியதோடு,”ட்விட்டர் இப்போது நல்ல கைகளில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் … Read more

50000 கணக்குகளை முடக்கி டிவிட்டர் அதிரடி

டிவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார் எலன் மஸ்க். இவர் ஏற்கனவே, டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிர்வகிக்கிறார்.எலான் மஸ்க் பதவியேற்றது முதல் , டிவிட்டரின் முக்கிய பதவிகளில் இருந்தவர்களை நீக்கியது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 25 வரையிலான காலகட்டத்தில்,குழந்தைகளின் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் ஒப்புதல் இல்லா நிர்வாணத்தை ஊக்குவிப்பதற்காக 52,141 கணக்குகளை ட்விட்டர் இந்தியாவில் தடை செய்துள்ளது. மேலும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டர், … Read more

இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் … Read more

சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் – அமைச்சர் ஐ.பெரியசாமி

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்றும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும் கூறினார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி … Read more

இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை- ஷகிப் அல்ஹஸன்

இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் தெரிவித்துள்ளார். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2 வில் இடம்பெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன. புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் … Read more

#BREAKING: சிலை கடத்தல் – சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு. சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அரியலூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் வரதராஜ பெருமாள் … Read more

தமிழ்நாட்டில் பாஜக வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும் – திருமாவளவன்

கார்ப்பரேட் மற்றும் சனாதனம்ஆகிய 2ம் தான் மோடி அரசின் கொள்கை என திருமாவளவன் விமர்சனம்.  சென்னை சைதாப்பேட்டையில் விசிக சார்பில்  இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்,தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ளப்பட்டத்தை கண்டித்து, சமாதானத்தை வேர் அறுப்போம்,மொழி போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ஒவ்வொரு தேசிய … Read more

அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு பேச்சு. பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார். தமிழக அரசு மதம், சாதி சார்ந்தது அல்ல, ஆளுநர் வேலை இல்லாமல் ஏதாவது பேசி கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். இதனிடையே, … Read more

2 லட்சம் மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கடத்திகள் தயார்.! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.! 

18,350 மின் மாற்றிகள், 5000 மின் கடத்திகள், 50,000 மின் கம்பங்கள் புதியதாக வரவழைக்கப்பட்டு, 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.  வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மின்துறை சம்பந்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.  அவர் கூறுகையில், 2700 பில்லர் பாக்ஸ்  மூலம் சென்னையில் தரையில் இருந்து 1 … Read more

#T20 World Cup 2022: வாழ்வா? சாவா? போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து.!

டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179  குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 180 ரன்கள் வெற்றி இலக்குடன் … Read more