இசை புயலின் குரலில் “பொன்னியின் செல்வன்” முதல் பாடல்.! முழு விவரம் இதோ….

1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மணி ரத்தனம் இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு … Read more

ஏலத்துக்கு வந்த ஹிட்லரின் கைக்கடிகாரம்.! 8.7 கோடி ரூபாய்…

ஹிட்லர் உபயோகப்படுத்திய கைக்கடிகாரம் அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் சுமார் 8.7 கோடி இந்திய மதிப்பில் ஏலம் போனது.  அமெரிக்காவில், மேரிலாண்ட் மாகாணத்தில், உள்ள அலெக்சாண்டர் வரலாற்று ஏலகூடத்தில் பழம்பெரும் பொருட்கள் ஏலமிடப்படுவது வழக்கம். அப்படித்தான் ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் உபயோகப்படுத்திய கைக்கடிகாரம் அங்கு ஏலம் விடப்பட்டது. அதன் விலை, 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.7 கோடி ஆகும் என கூறப்பட்டுள்ளது.

பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து..!

பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து.  பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்கள், பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ளார். இதனையடுத்து,  மு.க.ஸ்டாலின் அவர்கள், செவாலியே விருது பெறவுள்ள பதிப்பாசிரியர், கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘பதிப்புத்துறையில் இந்தியா – … Read more

அடுத்த பட அப்டேட் கொடுத்து அதிர்ச்சியளித்த லோகேஷ்.! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு…

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாறிவிட்டார். கடைசியாக இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், … Read more

இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து. இங்கிலாந்தில் காமன்வெல்த் சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதல் போட்டியில் 55 கிலோ ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் சர்கார் கலந்துகொண்டார். இவர் 248 கிலோ தூக்கி வெள்ளி புத்தகம் வென்றார். பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்கார் காயம் இருந்தபோதிலும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். மேலும், ஆடவருக்கான 55 கிலோ … Read more

இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் பூரண நலம் பெற்றார் – கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் பூரண நலம் பெற்று விட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை நோய் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், 35 வயதான அந்த நபர் தற்போது … Read more

மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும் என டெல்லியில் பிரதமர் பேச்சு.  டெல்லியில், அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவைகள் வழங்குநர்களின் முதல் கூட்டத்தின் துவக்க நாளில் கலந்து  அவர்கள் உரையாற்றினார். இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், டி.ஒய். சந்திரசூட், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த விழாவில் பேசிய அவர், மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும். அது எவ்வளவு எளிதானதாக இருக்க வேண்டும் … Read more

#CWG2022: காமன்வெல்த் டேபில் டென்னிஸ்: இந்திய மகளிர் அணி வெற்றி!

டேபில் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இரண்டாவது வெற்றி. காமன்வெல்த் டேபில் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது. டேபில் டென்னிஸ் 2வது போட்டியில் கயானாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி. டேபிள் டென்னிஸ் மகளிர் அணி போட்டியில் இந்தியாவின் ‘தங்கப் பெண்’ மணிகா பத்ரா தனது கயானா எதிராளியை வசதியாக வீழ்த்தி, இந்தியா 2-0 என முன்னிலை பெற உதவினார். முதல் செட்டில் 11-1 என … Read more

#Breaking : காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.! 

காமென்வெல்த் 2022இல் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை சங்கேத் சர்கர்  வாங்கி கொடுத்துள்ளார்.  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சரவதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பளுதூக்குதல் போட்டியில் 55கிலோ ஆடவர் பிரிவில் சங்கேத் சர்கர் கலந்துகொண்டார். இவர் 111, 107, 113 கிலோ எடையை அடுத்தடுத்த முறை தூக்கி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கி உள்ளார்.  55 கிலோ ஆடவர் பளுதூக்குதல் போட்டி … Read more

அது கரப்பான்பூச்சி இல்ல.. வெங்காயம் துண்டு.! சண்டிகர் உணவகத்தின் அட்ராசிட்டி…

சண்டிகரில் உள்ள பிரபல மாலில் உள்ள ஒரு உணவகத்தில் வாங்கப்பட்ட ஃபிரைடு ரைஸில் கறைபனிப்பூச்சியை பார்த்து ஊழியர்களது வெங்காய துண்டு என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஹோட்டல்களில் அவ்வப்போது இந்த புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு சில உணவகங்களில் தவறுதலாக ஏதேனும் வேண்டாத பொருட்கள், சாப்பிடக்கூடாத சில பொருட்கள் உள்ளே வந்து விடுகின்றன. அந்த விஷயங்கள் புகார், மூலமாகவோ, இணையதள வைரல் வீடியோ மூலமாகவோ பொது வெளிச்சத்திற்கு வந்த பிறகு அந்த உணவகம் அதனை … Read more