குலதெய்வத்தை வழிபடாமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வீட்டிற்கு வரலாம்..!

குலதெய்வ வழிபாட்டை செய்யாமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வீட்டிற்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நாம் நமது குலதெய்வத்தை வழிபட்டு தான் ஆரம்பிப்போம். ஆனால், இன்றைய காலத்தில் பலர் குலதெய்வ கோயில் சென்று வழிபடுவது கிடையாது. அதற்காக நேரம் ஒதுக்குவதும் கிடையாது. வீட்டில் நல்ல காரியம் தொடர்பாக பத்திரிகை வைக்க தான் பலபேர் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வருகிறார்கள்.

ஆனால், இதுபோன்று குலதெய்வத்தை மறந்து எப்போவாவது செல்வது என்பது தவறு. அதேபோல் வீட்டில் உள்ள பூஜை அறையில் நீங்கள் உங்கள் குலதெய்வத்தின் படத்தை மாட்டி வைக்கலாம். மற்ற சாமி படங்கள் வைத்து கொள்ளுங்கள், இருந்தபோதிலும் உங்களது குலதெய்வத்தின் படம் முக்கியமாக இருக்க வேண்டும்.

உங்களின் பூஜை அறையில் உக்கிரமான தெய்வங்களின் படங்களை வைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் உக்கிர தெய்வங்களை சாந்தப்படுத்துவது என்பது எளிமையான காரியம் இல்லை. அதனால் அதனை தவிர்த்து கொள்வது நல்லது. பூஜை அறையில் சிலை வைத்து வழிபாடு செய்வதையும் தவிர்த்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் சிலை நீங்கள் வைத்து வழிபடுகிறீர்கள் என்றால், அதற்கு சரியான முறையில் அபிஷேகம் செய்து நெய்வேத்தியம் வைக்க வேண்டும். அதனால் வீட்டில் சிலை வழிபாட்டை தவிர்த்து கொள்வது நல்லது. அதேபோல் வீட்டில் பூஜை அறையில் வைத்துள்ள சாமிகளுக்கு தினமும் விளக்கேற்றி பூஜை செய்வது என்பது முக்கியமான ஒன்று.

நீங்கள் உங்கள் குலதெய்வத்தை தினமும் வேண்டிக்கொள்வது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும். எல்லா நேரங்களிலும் குலதெய்வத்தின் அருள் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். முக்கியமாக வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வர வேண்டும். குலதெய்வத்தின் அருள் ஒரு வீட்டிற்கு இருந்தால் நீங்கள் நினைக்கும் வரம் உங்களுக்கு கிடைக்கும்.

ஆனால் பலபேர் குலதெய்வத்தை மறந்து விடுகின்றனர். அதனால் அவர்களது வீட்டில் பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்து நடைபெறுவதை காண முடியும். உங்கள் குடும்பத்தில் அசுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தாலோ, வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்தாலோ, வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு திருமணம் தடைபட்டு கொண்டிருந்தாலோ, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தாலோ, தொடர்ந்து தீமை ஏதும் நடைபெற்று கொண்டிருந்தாலோ உங்களுக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

குலதெய்வத்தின் அருள் கிடைக்க நீங்கள் நிச்சயமாக குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். குலதெய்வத்தை சாந்தப்படுத்தினால் தான் உங்கள் குறைகள் நீங்கி நிறைகள் அதிகரிக்க தொடங்கும். குலதெய்வத்தின் ஆசி நிறைவாக இருந்தால் உங்கள் வீட்டில் எல்லா நன்மைகளும் நடக்க ஆரம்பிக்கும்.

இந்த தீய பழக்கங்களை மாற்றினால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம்..!

இந்த தீய பழக்கங்களை மாற்றினால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பாதையை நோக்கி செல்வீர்கள்.

வாழ்க்கையில் அனைவரும் வெற்றி பெரும் வழியை தான் தேடுகின்றோம். அந்த வகையில் ஒருவன் தன் வாழ்வில் சில தீய பழக்கங்களை பின்பற்றுவதால் அவர்களால் எளிமையாக வெற்றி அடைய முடியவில்லை. அதனால் இந்த தீய பழக்கங்களை கைவிட்டால் நிச்சயம் அவர்களது வெற்றி நெருங்கி வரும். பொதுவாகவே மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தாலே பல்வேறு நன்மைகள் நடக்கும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களை மட்டும் மாற்றி கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

கோபம்: மனிதனுக்கு கோவம் என்பது கெடுதல் ஏற்படுத்த கூடியது. இது உடல் நலத்திற்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் எப்போதும் கோபப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்றால் அதுவே உங்களது வெற்றியை ஏற்படுத்த மிகப்பெரும் தடையாக இருக்கும். கோபம் அதிகமாக இருக்கும்போது, அந்த மனிதனது மனசாட்சியை இழக்க வைத்து விடும். அதனால் ஒரு முக்கியமான சமயத்தில் கூட எது நல்லது, எது கேட்டது என்று பிரித்து பார்க்க முடியாமல் போய்விடும். கோபம் அதிகம் இருக்கும் நபர்களிடத்தில் மகிழ்ச்சி இருக்கவே இருக்காது. அதனால் கோபத்தை விடுத்து மகிழ்ச்சியை அதிகரிக்க பாருங்கள்.

அதிருப்தி: ஒரு மனிதன் எதிலும் திருப்தி அடையாமல் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி கிட்டாது. மேலும் திருப்தி அடையாத மனிதன் சந்தோஷமாக இருக்க மாட்டான். அதனால் எல்லா விஷயங்களிலும் அதிருப்தியாகவே இருந்தீர்கள் என்றால் வாழ்க்கையில் வெற்றி வந்து சேராது. அனைத்திலும் திருப்தி அடைய பாருங்கள்.

சந்தேகம்: சந்தேகம் என்பது வாழ்க்கையில் பெரும் நோய். அதிகமாக சந்தேகப்படும் நபர்கள் வாழ்க்கையை அவர்களே அழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதிலும், சந்தேகப்படுபவர்கள் அவர்களது வாழ்க்கையை பற்றி சிந்திப்பதை விட மற்றவர் வாழ்க்கையை சிந்திக்கவே நினைக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு வெற்றி கிடைக்காது. பொதுவாகவே இந்த தீய குணம் உள்ளவர்களுக்கு பயம் அதிகமாக இருக்கும். அதனால் சந்தேகப்படுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.

பொறாமை: வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு போட்டி அவசியம், ஆனால் பொறாமை கண்டிப்பாக இருக்க கூடாது. மற்றவர்கள் மீது எப்போதும் பொறாமை கொண்டால் அவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இது உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிடாது. நல்ல திறமைகள் உங்களிடம் இருந்தும் பொறாமை குணத்தால் மற்றவர்களின் திறமையை கண்டு பொறாமைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

#Breaking:காமன் வெல்த்தில் 19 வயதான பளுதூக்கும் வீரர் ஜெர்மி தங்கம் வென்று சாதனை

இந்தியாவின் 19 வயது பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா, காமன் வெல்த் 2022ல் ஆண்கள் 67 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.

ஜெர்மி ஸ்னாட்ச் முறையில் 140 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 160 கிலோவும் சேர்த்து மொத்தம் 300 கிலோ எடையைத் தூக்கி, காமன் வெல்த்தில்  சாதனையைப் படைத்தார்.

காமன் வெல்த் 2022 இல் இந்தியா இப்போது இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில்  இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றார்.

100 கோடி சொத்தை அனுபவிக்க தந்தை போட்டு வைத்த கண்டிஷன்..!தவிக்கும் மகள்..!

Money

100 கோடி சொத்தை அனுபவிக்க தனது மகளுக்கு போட்டு வைத்த கண்டிஷனால் தவிக்கும் பரிதாப நிலையில் மகள் இருக்கிறார்.

12 மில்லியன் டாலர் சொத்துக்கள் உடைய ஆஸ்திரேலியா கோடீஸ்வரர் ஒருவர் தனது சொத்துக்களை அனுபவிக்க கண்டிஷன் ஒன்றை எழுதிவைத்துள்ளார். தனது மகளான கிளாரா பிரவுனுக்கு தெரிவித்துள்ள கண்டிஷன் என்னவென்றால் கிளாரா ஒரு நிரந்தரமான வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும், இதுதான் தந்தையின் கடைசி ஆசை என்றும் தெரிவித்துள்ளார். இதை செய்தால் மட்டுமே தன்னுடைய சொத்துக்கள் கிளாராவுக்கு சென்றடையும் என்று எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்.

கிளாராவுக்கு சிறிய வயதிலிருந்தே ஏடிஎச்டி என்ற கவனக்குறைவு பிரச்சனை இருக்கிறது. இதனால் தினமும் அவர் போராடி வருகின்றார். இந்நிலையில் பல்வேறு முயற்சி செய்தும் அவரால் ஒரு நிரந்தர வேலையை பெற முடியவில்லை. இதற்கு காரணம் இவருக்கு உள்ள இந்த பாதிப்புதான். மேலும் இவரால் கார் கூட ஓட்ட கற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் அவரால் ஒரு நிரந்தர வேலையை தேடி பெற முடியவில்லை. இதன் காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கிளாரா தனது தந்தை முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, என்னுடைய உரிமையை தயவுசெய்து எனக்கு கொடுங்கள். நான் மிகவும் பாதிப்படைந்து உள்ளேன். எவ்வளவு முயற்சி எடுத்தும் என்னால் நிரந்தர வேலையை பெற முடியவில்லை என அவருடைய குடும்பத்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவருடைய தந்தை இறப்பதற்கு முன்பு கூட அவர் வாரம் 40,000 பெற்று வந்துள்ளார். அதையும் பல நேரங்களில் தராமல் இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிளாரா தினசரி வேலைகளை செய்யவே சிரமப்பட்டு வருவதால் தன்னால் நிரந்தர வேலையை பெற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதனால் நீதிமன்றம் மூலமாகவாவது தனக்கு சரியான நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

பெண்கள் பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்கள்..!படிக்க மறக்காதீங்க..!

பெண்கள் பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்களை இந்த பதிவில் காணலாம்.

இதை படிக்கும் நீங்கள் பெண்களாக இருந்தால் இந்த ரகசியங்களில் உள்ள குணாதிசயங்களில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது உங்களுக்கே இது போன்ற குணாதிசயங்கள் இருக்கலாம். நீங்கள் ஒருவேளை ஆண்களாக இருந்தால் இது போன்ற குணாதிசயங்கள் தெரிந்த பெண்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கலாம். இவை உங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் பெண்களை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். சரி வாருங்கள் இந்த பதிவிற்கு செல்வோம்.

ஒன்று: பெண்களுக்கு வண்ணங்களை வித்தியாசப்படுத்தி பார்க்க தெரியும். உதாரணத்திற்கு டார்க் நிறம், லைட் நிறம் என்று சிறிய வித்தியாசத்தில்  சட்டை இருந்தால் அதனை ஆண்களால் பிரித்து பார்க்க முடியாது. இதே பெண்கள் இந்த சட்டைகளை ஒரே நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள். பொதுவாகவே பெண்கள் ஆண்களை விட 20 சதவீதம் அதிகமாக நிறங்களை பிரித்து பார்க்கும் தன்மை உடையவர்கள்.

இரண்டு: பெண்களுக்கு எப்படி நிறத்தில் சிறிய வித்தியாசம் இருந்தாலும் கண்டு பிடிக்க தெரிகிறதோ அதேபோல் சிறிய வாசனையையும் கண்டு பிடிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு. ஆண்களால் சிறு வாசனைகளை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க தெரியாது. ஆனால், பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள்.

மூன்று: பெண்களில் சிலர் உதட்டு சாயம் என்று சொல்ல கூடிய லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அதுபோன்ற பழக்கம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பொருந்தும். வருடத்தில் 260 நாட்கள் லிப்ஸ்டிக் போடுவார்கள். அதில் 0.45 கிலோகிராம் அளவு லிப்ஸ்டிக்கை ஒரு வருடத்திற்கு சாப்பிட்டு விடுவார்கள்.

நான்கு: ஆண்கள் திருமணத்திற்கு முன்பு அழகாக இருப்பார்கள். ஆனால், திருமணத்திற்கு பின்பு அவர்கள் உடல் எடை கூடிவிடும். இதற்கு முக்கிய காரணம் பெண்கள் ஆண்களுக்கு அதிகமாக உணவுகளை வழங்குவது. பெண்கள் ஆண்களிடம் முக்கியமாக எதிர்பார்ப்பது, பாதுகாப்பை தான். அதனால் ஆண்கள் திடம் குறைவாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்காது. இதனால் அதிகமாக உணவை வழங்கி ஆண்களுக்கு வலிமையை அதிகரிப்பார்கள். இன்னொரு காரணம் தனது கணவனை வேறு யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக முன்பு இருந்ததைவிட உடல் பருமனாக மாற்றிவிடுவார்கள்.

ஐந்து: பெண்கள் தங்களது உடையில் அதிகமாக கவனம் செலுத்தக் கூடியவர்கள். தங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதைவிட அது அழகாக இருக்கிறதா என்பதைத் தான் அதிகமாக பார்ப்பார்கள். வெளியில் உள்ளவர்கள் தங்களை பார்த்து இந்த உடை அழகாக உங்களுக்கு இருக்கிறது என்று கூறுவதைக் கேட்க தான் பெண்கள் அதிகமாக ஆசைப்படுகிறார்கள். அதனாலேயே அதிகப்படியாக தங்களுக்கு சவுகரியம் இல்லாத உடையாக இருந்தாலும் அதனை அணிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி பட்டவர்கள் அல்ல. ஆண்கள் தங்களுக்கு வசதியான ஆடைகளை மட்டுமே அணிகிறார்கள்.

ஆறு: பெண்களை ஆண்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா? என்று கேட்டால் அது கேள்விக்குறியாக மட்டுமே இருக்கும். அதற்கு விடை என்பது அளிக்க முடியாது. ஆனால் பெண்கள் எளிமையாக ஆண்களை புரிந்துகொள்வார்கள். ஆண்களுடைய  அசைவு, முகபாவனையை அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரை சரியாக கணித்து கூறி விடுவார்கள். அந்த அளவுக்குத் திறமை படைத்தவர்கள் பெண்கள்.

ஏழு: ஆண்களை பெண்கள் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அதனை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. குறிப்பாக பின்பக்கத்திலிருந்து பெண்கள் ஆண்களைப் பார்த்தால் ஆண்களால் அதை கணிக்கக் கூட முடியாது. ஆனால் பெண்கள் ஆண்கள் தங்களை எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் சரி அதனை சரியாக கணித்து விடுவார்கள். எந்த கண்ணோட்டத்தில் யார் பார்க்கிறார்கள் என்பது அவர்களுக்கு பத்தடி தூரத்தில் இருந்தாலும் திரும்பிப் பார்க்காமல் கூட சொல்லி விடுவார்கள்.

செஸ் ஒலிம்பியாட்- வெற்றி பெற்ற பிரக்யானந்தா..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றி வெற்றி அடைந்துள்ளார். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

முதல் நாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய வீரர்களாக பிரக்யானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் சாத்வனி கலந்து கொண்டனர்.

தற்போது இதில் எஸ்டோனிய வீரரான கிரில் சுகாவை வீழ்த்தி இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா வெற்றி பெற்றுள்ளார். மேலும், பிரக்யானந்தாவுடன் இந்திய அணி வீரர்களான குகேஷ் மற்றும் அதிபன் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

நேற்று 1,624 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,548 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 345 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் 1,964 குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

முழங்கை காயம்… மிஸ் ஆகி போன தங்கபதக்கம்.! வருத்தப்பட்ட பதக்க நாயகன் சங்கேத் சர்கார்.!

எனது முழங்கை காயம் காரணமாக வெள்ளிப்பதக்கம் தான் வெல்ல முடிந்தது என வருத்தத்துடன் சங்கேத் சர்கார் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் காமன்வெல்த் தடகள போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 55 கிலோ எடைப்பிரிவில், சங்கேத் சர்கார் எனும் 22 வயது வீரர் பங்கேற்றார்.

அவர் இறுதிப்போட்டியில் மொத்தமாக 248 கிலோ எடை தூக்கி, வெளிப்பதக்கத்தை பெற்றார். காமன்வெல்த் போட்டியின் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

இவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இது குறித்து, சங்கேத் சர்கார்  கூறுகையில், ‘ நான் கடந்த 4 வருடங்களாக தங்கம் வெல்ல தான் முயற்சித்தேன். ஆனால், கடுமையாக முயற்சித்தும், எனது முழங்கை காயம் காரணமாக வெள்ளிப்பதக்கம் தான் வெல்ல முடிந்தது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

#Breaking : இந்தியாவுக்கு இரண்டாவது காமன்வெல்த் பதக்கம்.!

காமன்வெல்த் போட்டியில், பளுதூக்கும் போட்டியில் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 

காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 61 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட குருராஜா எனும் வீரர் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் மொத்தமாக 269 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் காமன்வெல்த் பதக்கம் 2 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே இதே பளுதூக்கும் போட்டியில் 55கிலோ எடைப்பிரிவில், சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக உள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியவியல் ஜனநாயகம் வலுவாக உள்ளது என “Dreams Meet Delivery” எனும் நூல் வெளியிட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் பேச்சு.

சென்னை போரூரில் “மோடி 2020 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” நூல் வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது. ஆட்சியில் இருப்பதற்கு வரவில்லை, அடிப்படையில் மாற்றம் கொண்டுவர வந்துள்ளதாக மோடி கூறுவார். நரேந்திர மோடி ஆட்சியில் எங்கேயாவது ஊழல் என கேள்விப்பட்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பிய நிதியமைச்சர், குறுகிய மனப்பான்மையுடன் பிரதமர் மோடி செயல்படமாட்டார் என்றும் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து அந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் உரையாற்றினார்.