பிரமாண்ட செஸ் நிகழ்ச்சியை இயக்க தயாரான விக்னேஷ் சிவன்… அப்போ அஜித் பட நிலைமை.?!

சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த செஸ் விளையாட்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பெரிய பெரிய விவிஐபிக்கள் வரவுள்ளனர். மேலும், இரண்டு பெரிய முன்னணி இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி நடத்தவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த … Read more

இவரின்பெருமையை மக்களிடம்கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு – ராமதாஸ்

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஜமதக்கனி செய்த தியாகங்களும், படைத்த சாதனைகளும் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என ராமதாஸ் ட்வீட்.  இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என டாக்.ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று … Read more

மக்களே கவனமாக இருங்க…மீண்டும் 18,819 ஆக எகிறிய கொரோனா;39 பேர் பலி;1 லட்சத்தை தாண்டிய சிகிச்சை!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 14,500 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,819 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,52,164 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,602-லிருந்து தற்போது 1,04,555 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று 30 பேர் பலியான நிலையில்,கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை … Read more

#PANAadhaarlink:இன்றே கடைசி நாள்;மீறினால் ரூ.1000 அபராதம் – மத்திய அரசு அறிவிப்பு!

பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன்  முடிவடைகிறது.  மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி),பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு முன்னதாக 30 செப்டம்பர் 2021 முதல் 31 மார்ச்,2022 வரை நீட்டிக்கப்பட்டது.அதன்பின்னர்,எழுந்த பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் நிறைவு: இந்நிலையில்,பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.எனவே,இன்றைக்குள் (ஜூன் 30, 2022) ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கவிட்டால் வருமான வரிச் சட்டம் 272N … Read more

இன்று முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.  நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை … Read more

3,552 காலிப் பணியிடங்கள்…சீருடைப் பணியாளர் தேர்வு – இன்று அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 3,552 சீருடைப் பணியாளர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிடுகிறது.அதன்படி,இரண்டாம் நிலைக் காவலர்,சிறைக் காவலர்,தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து,https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,முதல் முறையாக தமிழ் மொழி தகுதித் தேர்வை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு … Read more

தொடங்கியது கவுண்டன்…3 செயற்கைக்கோள்களுடன் இன்று மாலை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக தெளிவுடன் ஒரே நேர்த்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ(DS-EO) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்,என்இயு-சாட்(NeuSAR, SAR),ஸ்கூப் 1 என மூன்று செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் இன்று( ஜூன் 30 ஆம் தேதி) விண்ணில் செலுத்த உள்ளது.அதன்படி,ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி53 விண்கலம் இன்று மாலை 6 மணிக்கு புறப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை … Read more

ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் – இன்று திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு நிகழ்சிகள் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர் சென்ற நிலையில்,16,820 பயனாளிகளுக்கு ரூ.103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினார்.மேலும்,திருப்பத்தூரில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தையும் முதல்வர் திறத்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து,வேலூரில் ரூ. 53.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் நேரில் சென்று திறந்து வைத்தார். அதன்பின்னர்,வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் … Read more

பதவி விலகிய உத்தவ் தாக்கரே – அடுத்த முதல்வர் இவரா?..!..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து,மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிர்த்து … Read more

#BREAKING : நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு – பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே…!

முதலமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு  எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற  நிலையில்,  அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் … Read more