மீண்டும் மீண்டும் கார்த்தியுடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்.!

இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படம் வெளியாகுமென்று அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கார்த்தியின் விருமன் படம் வெளியாகவுள்ள நிலையில், மற்றோரு படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், அனுதீப் இயக்கத்தில் சிவகார்திக்கேயன் நடித்து வரும் “SK20” திரைப்படமும் இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் வெளியாகும் என அறிவிப்பு … Read more

#Breaking:முதல் முறை….25,000 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் இன்றுடன் பணி ஓய்வு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில்,தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர். புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.ஏற்கனவே,மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது … Read more

#Breaking:9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி,டெய்லரிங் டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனினும்,நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முடித்து 10 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் எனவும்,வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் எனவும் … Read more

அடி தூள்.! 110 கோடிகளை தாண்டிய மாநாடு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்சன், கருணாகரன், பிரேம் ஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சிம்புவிற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேலாக … Read more

குட்நியூஸ்…12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

கடந்த மே 5 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வந்த நிலையில்,மே 28 ஆம் தேதி வரை நடைபெற்ற வேதியியல் பாடத்திற்கான இரு வினா எண்கள் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில்,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாளில் இடம்பெற்ற இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி,பகுதி 1-அ,வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ,வினா எண் 5-க்கு விடையளித்திருந்தால் முழு … Read more

அதிரடி…494 கஞ்சா வழக்குகள்;முதல் முறையாக 813 வங்கிக் கணக்குகள் முடக்கம் – தென்மண்டல ஐஜி எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O-ன் கீழ் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்திருந்தது.இதுபோன்று,6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும்,கஞ்சா பதுக்கல்,விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்கு,சொத்துக்களை முடக்க காவல்துறை உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், … Read more

#Breaking:மக்களே கவலை வேண்டாம்…மீண்டும் சரிந்த கொரோனா பாதிப்பு;ஆனால்,ஒரே நாளில் 19 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,706 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 2,338 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,58 ,087 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 25 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை … Read more

“எனக்கு அமைச்சர் பதவியா?…தலைமைக்கு தர்மசங்கடம் வேண்டாம்” – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புதல்வரும்,திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைப்போல,திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,தஞ்சாவூர்  மாவட்டத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திலும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தனக்கு … Read more

முடிந்தது கெடு…இன்று கோட்டை நோக்கி மாபெரும் பேரணி – பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விடுத்தார்.மேலும்,மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம், டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,சென்னையில் … Read more

மிக்க மகிழ்ச்சி…பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள்;ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “அண்மையில் நடைபெற்ற 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,திண்டுக்கல்,ஈரோடு,நாமக்கல்,கோயம்புத்தூர்,நீலகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,சாலை வசதி,குடிநீர் வசதி,தடுப்பணை கட்டுதல் … Read more