ரஜினிக்கு உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் ரூ.65 லட்சம் கடன் பெற்றதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. சினிமா பைனான்சியரிடம் பெற்ற கடனை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.  பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிடக்கோரி … Read more

முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை …!

 54 வயதுடைய முன்னாள் டென்னிஸ் வீரரும், மூன்று முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமாகிய போரிஸ் பெக்கர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் ஒரு காலகட்டத்தில் சிறந்த டென்னிஸ் வீரராக இருந்து வந்த நிலையில், தனியார் வங்கி ஒன்றில் கோடிக்கணக்காக பணம் வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்தாததால் தான் திவாலானவர் என பெக்கர் அறிவித்திருந்தார். ஆனால் போரிஸ் பெக்கர் பொய் சொல்லியதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்த பணங்கள் அனைத்தையும் தனது … Read more

#JustNow: TANCET தேர்வு – நாளை மறுநாள் ஹால் டிக்கெட் வெளியீடு!

நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் … Read more

நான் இந்த படங்களை எல்லாம் பாக்கவே மாட்டேன்.! பேட்ட வில்லனின் சர்ச்சை பேச்சு.!

தமிழ் சினிமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி நடித்த “பேட்ட” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவரிடம் சமீபத்தில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்களுக்கு சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நவாசுதீன் ” பொதுவாக நான் இதுவரை தென்னிந்திய திரைப்படங்களை பார்த்ததே கிடையாது. அதனால், தென்னிந்திய திரையுலகம் குறித்த … Read more

காரணம் சொல்லாமல் பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யுங்கள் – உ.பி அரசை விமர்சித்த அகிலேஷ் யாதவ்!

உதைத்தார் பிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு சில பகுதிகளிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் உத்தர பிரதேச மின்சாரத்துறை அமைச்சர் ஏ.கே.சர்மா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும், பருவகால புயலால் ஹர்துவாகஞ்ச்-605 மெகாவாட் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை சரி செய்து போர்க்கால அடிப்படையில் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.  சர்மாவின் கருத்துக்கு உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, அரசாங்கத்தின் … Read more

ஆந்திர மாநில YSRC தலைவர் கொலை .., 3 போலீசார் காயம்..!

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துவாரகா பகுதியில் உள்ள ஜி கொத்தபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்த யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தலாரி வெங்கட ராவ் என்பவர் தான் காரணம் என உள்ளூர் மக்கள் அவரை … Read more

பொம்மை படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து. ரிலீஸ்-ஆக தயாராக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகாமல் உள்ளது. படம் எப்போது … Read more

#GTvRCB: டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் தேர்வு!

ஐபிஎல் தொடரின் இன்றைய பிற்பகல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 நகரங்களில் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாய் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, முதல் போட்டியான இன்று பிற்பகல் நடக்கும் 43-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், … Read more

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு..கொளுத்தப்போகும் வெயில் – வானிலை மையம்

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கி இருப்பதால், ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டிவதைக்கிறது. இந்த சமயத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால் … Read more

“அவதூறு பரப்பினால் நடவடிக்கை” – அமைச்சர் செந்தில் பாலாஜி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு. மின்வெட்டு குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், நேற்று தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 மில்லியன் யூனிட் … Read more