#IPL2022: ஹட்-ட்ரிக் தோல்வியை சந்தித்த ஹைதராபாத்.. புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்!

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 11 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை சந்தித்தது. 15-வது ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடந்து முடிந்த போட்டியில் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி … Read more

#IPL2022: 170 ரன்கள் இலக்கு.. வெற்றிபெறுமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்த நிலையில், 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் 1 … Read more

பானிபூரி குருமாவில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!

தஞ்சையில் பானிபூரி குருமாவிற்குள் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.  தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுசுயா தங்களது வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ரிஷி என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி  … Read more

இலங்கை அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்ற சுதந்திர கட்சி..!

இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற முன்னாள் அதிபர் சிறிசேனாவின் சுதந்திர கட்சி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  இலங்கை பொருளாதார நெருக்கடி  இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு  அங்கு … Read more

தமிழகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! உயிரிழப்பு ஏதுமில்லை..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும், 33 பேர் … Read more

மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? – சீமான்

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து சீமான் அறிக்கை.  மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்துவரி உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் பெருநகரங்கள் முதல் பேரூராட்சிகள் வரையுள்ள … Read more

#SRHvLSG: முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஐதராபாத்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 15-ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மற்றும் கேஎஸ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஐதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு … Read more

சொத்து வரி உயர்வு : ஏப்-8ல் பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை

தமிழக அரசின் அதிகபட்ச சொத்துவரி உயர்வை கண்டித்து ஏப்.8-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்துவரி உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 150% வரை சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது மக்கள் விரோதப்போக்காகும் என்றும், தமிழக … Read more

சைபர் குற்றவாளிகளை எதிர்கொள்ள நாட்டின் சட்ட அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் -மத்திய அமைச்சர் வைஷ்ணவ்!

இணைய குற்ற விசாரணை மற்றும் டிஜிட்டல் தடவியல் தொடர்பான இரண்டாவது தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக அதிக உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் வசதியை அளித்துள்ளது. ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. அது சில சமயங்களில் நல்லதாக இருந்தாலும், சில சமயங்களில் மோசடியான செயலை செய்ய வழிவகுக்கிறது. சைபர் குற்றங்களை எதிர்ப்பதற்கான சட்ட அமைப்புகள் குறித்து பேசிய … Read more

இளையராஜா மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கில் இன்ரிகோ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றால்தான் இசையை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், தயாரிப்பாளர்களுக்கு பட காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்ல என்று தெரிவித்ததை தொடர்ந்து, இன்ரிகோ, அகி, யுனிசிஸ் இன்போ நிறுவனங்கள் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. … Read more