பக்கா மாஸ்…உலக சாதனை படைக்கும் ‘துணிவு’…வெறித்தனமான டிரைலர் இதோ..!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,படத்தின் … Read more

ரயிலில் சிக்கிய ஆடையால் நடந்த விபரீதம்..பரபரப்பான வீடியோ..!

ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆடையால் நடைபாதையின் இறுதி வரை இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் பரபரப்பு வீடியோ. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி மும்பை மெட்ரோ ரயிலின் கதவுகளுக்கு இடையே கௌரி குமாரி சாஹு என்ற பெண்ணின் (துப்பட்டா) ஆடையானது சிக்கிக்கொண்டது. அதனை கவனித்த பயணி ஒருவர் ஓட்டுனரின் அறையை தட்டியபோதும் அதை கவனிக்காமல் ரயில் புறப்பட்டது. ரயிலில் இருந்து தன்னை காப்பாற்ற முயற்ச்சித்தும் அந்த பெண்ணால் முடியவில்லை. இதனால் ரயிலுடன் அந்த பெண்ணும் நடைபாதையின் … Read more

இன்று இரவு 8 மணிக்கு மேல் தடை – சென்னை காவல்துறை எச்சரிக்கை!

இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 … Read more

இந்திய அரசு மீதான சைபர் தாக்குதல்கள் 95% அதிகரிப்பு.!

2022 ஆம் ஆண்டின், இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறை மீதான சைபர் தாக்குதல்கள் 95% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அரசின் துறைகள் மீது குறிவைக்கும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிளவுட் எஸ்இகே (CloudSEK) தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சைபர் தாக்குதல்கள் 95% அதிகரித்துள்ளன. இந்திய அரசாங்க நிறுவனங்கள் மீதான மொத்த சைபர் … Read more

காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரியா பவானி சங்கர்.!

சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால … Read more

பாகிஸ்தான்-நியூசிலாந்து 2-வது டெஸ்ட்! இலவச அனுமதி.!

கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கு இலவச அனுமதி. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பார்வையாளர்களுக்கு இலவச … Read more

#24×7: உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி!

டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி. டெல்லியில், 4 மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள், பார்கள் மற்றும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. இந்த அனுமதி பெற ஹோட்டல் உரிமையாளர்கள், அடிப்படை கட்டணத்தை செலுத்தி, உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மூன்று … Read more

2022-ல் 73 வழக்குகள், 456 பேர் கைது – என்ஐஏ

2022-ஆம் ஆண்டில் 73 வழக்குகள் பதிவு செய்து, 456 பேரை கைது செய்துள்ளது என்ஐஏ. 2022-ல் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது, இது 2021ல் பதிவு செய்யப்பட்ட 61 வழக்குகளில் இருந்து 20% அதிகமாகும். இந்த எண்ணிக்கை என்ஐஏ-க்கு முன்னெப்போதும் இல்லாத உயர்வாகும். இந்த வழக்குகளில் 11 ஜம்மு காஷ்மீர், 10 இடதுசாரி தீவிரவாதம், ஏழு தடை செய்யப்பட்ட PFI உடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டில் 456 … Read more

நியூசிலாந்தில் 2023! புத்தாண்டு வரவேற்பு .!

நியூசிலாந்து நாட்டில் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தில் 2023 ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்ததை, மக்கள் வெடிவெடித்து வாணவேடிக்கையுடன் கொண்டாடி வருகின்றனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் புதிய ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.

பட்டாசு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், தாயார் செல்வி, மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் … Read more