#BREAKING: டெல்டா போல் பரவத் தொடங்கியதா ஓமைக்ரான்? – மத்திய அரசு

டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல். இந்தியாவில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை ஓமைக்ரனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் சார்பாக பல்வேறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில். இந்த தகவலை கூறியுள்ளது. அதாவது, … Read more

மனதளவில் என்றும் இளமை மாறாத அண்ணனுக்கு Happy New Year..! – கமலஹாசன்

இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன். பிரபல நடிகரும், மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள், இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பக்கத்தில், ‘இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year.’ என பதிவிட்டுள்ளார். … Read more

இளமை இதோ இதோ.! இசைஞானி வெளியிட்ட துள்ளலான புத்தாண்டு வாழ்த்து வீடியோ.!

இசைஞானி இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தான்டு வாழ்த்தை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில் இளமை இதோ இதோ எனும் பாடலை பாடி வாழ்த்தியுள்ளார். 1982ஆம் ஆண்டு எஸ்.பி,முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். அந்தாண்டு முதல் தற்போது நாளை பிறக்க போகும் புது … Read more

இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும் – டிடிவி தினகரன்

நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், ‘எல்லைகளைக் கடந்து உலகெங்கும் கொண்டாடப்படுகிற ஆங்கிலப் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும். அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் புதுவடிவமான ஓமிக்ரான் பயம் நீங்கி, ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒவ்வொருவரும் வாழ்ந்திட புத்தாண்டில் இறையருளை வேண்டுகிறேன். தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் … Read more

முதுகலை பொறியியல் கலந்தாய்வு… 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப்பிரிவினருக்கு 18% GST வரியாக ரூ.54-ம், இதர பட்டியலின மாணவர்களுக்கு ரூ.27-ம் வசூலிக்கப்பட உள்ளது. M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் … Read more

#Breaking:வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு!

தஞ்சை:வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் அருளானந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கியிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அங்கு வந்து,அருளானந்த நகரில் உள்ள சாமியப்பன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, ரூ.500 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சை மரகத லிங்கம் அவரின் வங்கி லாக்கரில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் … Read more

இந்தியன்-2 வின் மிரளவைக்கும் அப்டேட்.! விவேக்கிற்கு பதில் மின்னல் நடிகர்.!?

இந்தியன்2 திரைப்படத்தில் விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். உலகநாயகன் கமல்ஹசன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராக உள்ளதாக 2 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பில் விபத்து, கொரோனா படக்குழுவினர் இடையே பிரச்சனை என ஷூட்டிங் நடைபெறாமலே இருந்தது. இதற்கிடையில் கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ஷங்கர் தெலுங்கில் ராம் … Read more

#Breaking:ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்தம் – கவுன்சில் கூட்டம்!

டெல்லி:ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை,மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்ற 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்,ஜிஎஸ்டி கவுன்சிலின் 46-வது கூட்டம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் வருகின்ற பிப்ரவரி முதல் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.பிரதமர் … Read more

தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -ஓபிஎஸ், ஈபிஎஸ்

இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம். புலரும் புத்தாண்டில், மக்கள் அனைவரது வாழ்க்கையும் … Read more

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓடி ஒளியக்கூடாது- டிடிவி தினகரன் ..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது. வழக்கை சந்திப்பது தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என டிடிவி தினகரன் தெரிவித்தார். இன்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இலக்கு அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது. வழக்கை சந்திப்பது தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அண்ணன் எடப்பாடி ஆட்சியில் எதையெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் தாண்டி தற்போது மு.க. ஸ்டாலின் செய்து … Read more