மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!

20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்கப்படுகிறது.  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில், இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்..!

இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டமானது அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இன்றைய (01.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். இன்று மகிழ்ச்சியான தருணங்கள் நடைபெறும். உத்தியோக பணிகளில் சக பணியாளர்களிடம் நல்லுறவு ஏற்படும். உங்கள் மனைவியுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள், அதிர்ஷ்டமான எண் 3. ரிஷபம் : இன்றைய தினத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். உங்களது மனைவியுடன் நட்பாக பழகுவீர்கள். இன்று நிதிநிலைமை … Read more