‘அம்மா வளாகம்’ பெயர் மாற்றப்படவில்லை“ – அமைச்சர் தங்கம் தென்னரசு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம். மறைந்த திமுக மூத்த தலைவரும், அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி, இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா வளாகத்திற்கு மறைந்த … Read more

43 மீனவர்களுக்கு டிசம்பர் 31 வரை நீதிமன்ற காவல்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 43 பேருக்கு டிச.31ம் வரை நீதிமன்ற காவல். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு, டிசம்பர் 31ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது நிலையில், இன்று மேலும் தமிழக மீனவர்கள் 12 பெயரை … Read more

ICC U19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ. 19 வயதிற்குட்பட்டோருக்கான #WorldCup2022 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. யாஷ் துல் தலைமையிலான இளம்படையில் தமிழக வீரர் மனோவ் பாரக் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்திய அணியின் முதல் போட்டி ஜன.15-ம் தேதி தென்னாப் பிரிக்கா … Read more

மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க கோரி முதலமைச்சர் கோரிக்கை. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 55 பேரை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை, 8 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கை கடற்படை செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more

#DoandDie: செய்து முடித்துவிட்டு தான் சாக வேண்டும் – அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் உரை!

அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை. சென்னை மதவாரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் 14-ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை. அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. திமுக ஆட்சி அமைத்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு துணையாக நிற்கும். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரசு ஊழியர்களுக்காக ஏரளமான திட்டங்களை … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை – கனிமொழி எம்பி ட்வீட்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு கனிமொழி கோரிக்கை. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து 2 படகுகளும் பறிமுதல் செய்துள்ளது. இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 12 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்வகளை இலங்கை கடற்படை கைதை … Read more

பொறியியல் செமஸ்டர் தேர்வில் எளிமையான கேள்விகள் – துணைவேந்தர் உறுதி!

பொறியியல் செமஸ்டர் தேர்வில் எளிமையான கேள்விகள் கேட்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் உறுதி. ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.  நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என தெரிவித்தது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற உள்ளது. B.E., B.Arch., … Read more

543 ரயில் நிலையங்களில் “Wi-Fi” வசதி – தெற்கு ரயில்வே

ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi வசதி விரைவில் அறிமுகம். தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக wi-fi வசதியை பயன்படுத்தலாம். அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் – 79, … Read more

#BREAKING: தரமற்ற உணவு – இருவர் கைது!

ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த இருவரை கைத செய்த காவல்துறை. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியதாகவும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும் சமையல் மேற்பார்வையாளர்கள் பிபின், கவியாசரேன் கைது செய்யப்பட்டனர். தங்கும் விடுதி நடத்தி வரும் சதாசிவம் தலைமறைவான நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

நம்மைக் காக்கும் 48 திட்டம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழகத்தில் சாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுப்பதற்கு, விபத்தில் சிக்குவோரின் சிகிச்சைக்காக உதவும் வகையில், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும், … Read more