தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அங்கீகாரம்

தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்.மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகாரம் சிலம்பம் விளையாட்டை மத்திய அரசின் விளையாட்டுத் துறை அங்கீகரிப்பு. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது தமிழினத்திற்கு பெருமை – மாண்புமிகு சுற்றுசூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வி.மெய்யநாதன் அவர்கள் அறிக்கை. தமிழர்களின் பாரம்பரிய பெருமை மிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும் தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும் … Read more

45 நிமிடம் மருத்துவ ரீதியாக உயிரிழந்தவர், தனது பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் முன் உயிர் பெற்றார்..!

45 நிமிடம் மருத்துவ ரீதியாக உயிரிழந்தவர், தனது பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் முன் உயிர் பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 நிமிடங்களுக்கு மருத்துவ ரீதியாக இறந்த ஒரு பெண் தன் மகளுக்கு குழந்தை பிறக்கும் முன்பே மீண்டும் உயிர்பெற்றுள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த கேத்தி பாட்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அவருக்கு வாழ்க்கையில்  மீண்டும் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேத்தி கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அவள் மகள் ஸ்டேசி ஃபைபர் பிரசவத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. … Read more

புதிய போஸ்டருடன் வெளிவந்த பொன்னியின் செல்வன் அப்டேட்..!

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டருடன் புதிய தகவல் வெளிவந்துள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும், கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மத்தியப்பிரதேசம், … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-22 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,653 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,653 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,43,683 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 204 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,310 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,581 பேர் … Read more

உள்ளாட்சி தேர்தல் – அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய மாநில தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் டிடிவின் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற … Read more

டெல்லி ஆம் ஆத்மி அரசுடன் கைகோர்த்த நடிகர் சோனு சூட் மீது ரூ.20 கோடி வரி ஏய்ப்பு புகார்!

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் சோனு சூட் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது, ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி … Read more

நாளை சென்னை – மும்பை அணிகள் மோதல் ..!

நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்   இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. நாளை தொடங்கும்  போட்டி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி  12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் அணிகள் 5 வெற்றி, … Read more

இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!

இதுவரை இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 80 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது.  முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கியமான சாதனைக்கு இந்திய … Read more

ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத திருமாவளவன்…! என்ன காரணம்…?

தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதா திருமாவளவன்.  தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர்  நியமித்தார். இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வைத்து காலை 10.30 மணியளவில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் … Read more

டாக்டர் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த … Read more