மத்தியப்பிரதேசம்: மனைவியை குச்சிகளால் அடித்து தாக்கிய கணவர்..!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூரில் மனைவியை சாலையில் வைத்து குச்சியால் அடித்து தாக்கியுள்ளார் கணவர். மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் தனது மனைவி ஒரு பையனுடன் தனியாக இருப்பதைக் கண்ட கணவன், அந்த மனைவியை குச்சியால் அடித்து தாக்கியுள்ளார். அங்குள்ள சோண்ட்வா போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் செப்டம்பர் 10-ஆம் தேதி சாலையின் நடுவில் வைத்துஅடித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து போலீசார் 6 பேரை கைது செய்தனர். முதலில், அவர் தனது மனைவியை … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,580 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-22 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,580 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,580 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,35,419 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 185 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,509 பேர் … Read more

இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் கிடையாது?

கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு  முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் … Read more

கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் – அதிமுக தலைமை அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை … Read more

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பன்வாரிலாலை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உள்ளனர். தமிழக ஆளுநராக பணியாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை 8:30 மணிக்கு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் … Read more

அனைத்து வித போட்டிகளுக்கும் விராட் கோலி தான் கேப்டன் – பிசிசிஐ..!

அனைத்து வித போட்டிகளுக்கும் விராட் கோலி தான் கேப்டன் என்று பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக  விளங்கும் விராட் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் கேப்டென்சியை இழக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும், அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள ஐசிசி டி-20 உலகக் கோப்பையை வெல்ல முடியாவிட்டால், விராட் தனது வெள்ளை பந்து கேப்டன்சியை இழக்கலாம் என்றும் ரோஹித் சர்மாவை இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவிக்கலாம் என்றும் … Read more

“சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு” – முதல்வர் ஸ்டாலின்…!

காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த ஆக.13-ம் தேதி தொடங்கிய நிலையில் பொது பட்ஜெட் தாக்கல் மற்றும் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து,பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக,சட்டப்பேரவை கடைசி நாளான இன்று காவல்துறையினரின் நலன் கருதி திட்டங்கள்,நீட் தேர்வு விலக்கு மசோதா,கூட்டுறவு வங்கிகளில் … Read more

ரம்யா பாண்டியனின் “ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” பட அப்டேட்.!

ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு, கடந்த 2019-ஆம் ஆண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தென்னிந்தி அளவில் பிரபலமாகினார். அதன்பின், பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி தனக்கென்று ரசிர்கர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். இந்த … Read more

சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் நடைபெற்ற அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வுகளின் முடிவுகள், சென்னை உயர் நீதிமன்றத்தால் (MHC) வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறமுடியும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். MHC TN முடிவு 2021: அதிகாரப்பூர்வ வலைத்தளமான mhc.tn.gov.in … Read more

குட்நியூஸ்…”பெண்களால் மட்டுமே நடத்தப்படும்” – ஓலா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

ஓலா ஃபியூச்சர் தொழிற்சாலை 10,000 க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்துவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பிரபல ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் திங்களன்று எதிர்கால ஓலா தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்: “தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பெண்கள் தேவை. பெண்கள் இந்தியாவில் இருந்து மின்சார வாகன புரட்சியை உலகிற்கு கொண்டு வருவார்கள்!இந்தியாவின் பொருளாதார … Read more