மகாராஷ்டிராவில் 3,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 3,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாகவே தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 3,075 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது … Read more

திரும்பி வந்துட்டேனு சொல்லு 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கோலை அடித்த ரொனால்டோ

பிரீமியர் லீக் கால்பந்துன் போட்டியின் இன்றைய போட்டியில்  மான்செஸ்டர் யுனைடெட் மற்றும்  நியூகேஸ்டில் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் பாதியில் 45 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கான அதிரடி கோலை அடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மான்செஸ்டர் அணிக்கான தனது தாகத்தை தீர்த்துள்ளார்.  

கேரளாவில் இன்று 20,487 பேருக்கு கொரோனா தொற்று..!

கேரள மாநிலத்தில் இன்று 20,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 20,487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 22,155 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 181 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,484 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 2,31,792 பேர் உள்ளனர்.  கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள … Read more

காஞ்சிபுரம்: காருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்..!

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் காருக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் 20 வயது பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ஒரு மொபைல் கடையில் பணிபுரிபவர். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இவன் நட்புடன் பழகியிருக்கிறான். மேலும் அவளது பணியிடத்தில் அடிக்கடி அவளை சந்திப்பதும், சமூக வலைதளங்களில் உரையாடடுவதும் வழக்கமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் அந்த குற்றவாளி சிறிது நாட்களுக்கு முன்பு … Read more

கே.எஸ். அழகிரி பேச்சு அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது – அண்ணாமலை

கே.எஸ் அழகிரிக்கு, ஏதொரு விஷயத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பேசிகொண்டியிருக்கிறார் என அண்ணாமலை விமர்சனம். தமிழகத்திற்கு முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்திருந்தார். சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது தான் சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத … Read more

ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் … Read more

#BREAKING: 10, +11 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி-முதல்வர் அறிவிப்பு..!

12ஆம் வகுப்பை தொடர்ந்து, 10, 11ஆம் வகுப்பு மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-27 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,639 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,639 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,32,231 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 170 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,146 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,517 பேர் … Read more

எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் – அம்பேத்கார் பல்கலைகழகம் ..!

3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கார் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30-ம் தேதி வரையிலும், இதர சட்டக் கல்லூரிகளில் சேர அக்டோபர் 6-ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களில் ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆனதைக் குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்…!

கார்களில் ஹேண்ட் பிரேக்  (ஃபெய்லியர்) செயலிழப்பதை குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் குறித்து கீழே காண்போம்: பொதுவாக ஹேண்ட் பிரேக், கார்களை நிறுத்திய பின்னர்,கார்கள் நகராமல் இருக்கவும்,செங்குத்தான மற்றும் மலைப் பகுதிகளில் நிறுத்தும்போது வாகனங்கள் நகராமல் இருக்கவே பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக,சில இக்கட்டான நேரங்களில் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டும் ஹேண்ட் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முக்கியமான ஹேண்ட் பிரேக்கை முறையாக  பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.ஆனால்,பெரும்பாலானோர் இதனைக் கடைப்பிடிப்பது இல்லை.இதனால்,ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழக்கின்றன. ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழப்பதை … Read more