பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த பிரவீன் குமார் விளையாடி உள்ளார். பிரிட்டன் வீரர் ஜனதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதியில் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 45,352 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு; 366 பேர் இறப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 366 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,29,03,289 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 1,500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,29,03,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 366 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,39,895 பேர் … Read more

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் – மத்திய அரசு!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் அவசியம் என மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாடு விதித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசு தலைமை … Read more

மகிழ்ச்சி….பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 11 வது பதக்கம்;பிரவீன் குமார் அசத்தல்…!

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆண்கள் உயரம் தாண்டுதல் (T64) போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார். இப்போட்டியில்,பிரவீன்குமார் 2.07 மீ உயரம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில்,பிரவீன் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார்.எனினும்,2.07 மீ தாண்டியதன் … Read more

என் கணவரிடம் கண்டிப்பாக ‘இந்த’ நம்பிக்கை இருக்க வேண்டும்.! – ராசி கன்னா.!

தனக்கு வரவேண்டிய வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என நடிகை ராசி கன்னா பேசியுள்ளார்.  தெலுங்கில் ரூபி சிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்ளக் தர்பார் படத்திலும், ஆர்யாவிற்கு ஜோடியாக அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பழம் படத்திலும், கார்த்திகு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, தெலுங்கில் இரண்டு … Read more

வாழைப்பூ அடை எப்படி செய்வது தெரியுமா…? வாருங்கள் அறியலாம்!

வாழைப்பூவில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இந்த வாழைப்பூவை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும் சிறந்த இயற்கை உணவாக இருக்கும். இந்த வாழை பூவை வைத்து எப்படி காலை உணவுக்கு ஏற்ற அடை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி அரிசி கடலைப்பருப்பு துவரம்பருப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் வாழைப்பூ கருவேப்பிலை காய்ந்த … Read more

5 மாதங்களுக்கு பின் முதுமலை சுற்றுலா மையம் இன்று திறப்பு…!

நீலகிரியில் உள்ள முதுமலை சுற்றுலா மையம் இன்று முதல் திறப்பு.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. … Read more

இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்த தினம்…!

இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி புதுடெல்லியில் பிறந்தவர் தான் இந்தியப் பெண் எழுத்தாளர் கிரண் தேசாய். இவர் மிக இளம் வயதிலேயே புக்கர் விருது பெற்ற பெண் எழுத்தாளர் ஆவார். 1997 ஆம் ஆண்டு இவர் தனது முதன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு தனது வாழ்க்கை அனுபவங்களை வைத்து, 1998-ல் … Read more

ஜல்லிக்கட்டு : நாட்டு மாடுகளுக்கு மட்டும் அனுமதி…! நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்…!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்கு, இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து அதிமுக முன்னாள் … Read more

இன்றைய (03.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். ரிஷபம்: இன்றைய தினத்தை அமைதியான தினமாக ஆக்க நீங்கள் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும். மிதுனம்: இன்று நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். உணரச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். கடகம் : இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இன்று சில சௌகரியங்கள் குறைந்து காணப்படும். சிம்மம்: இன்று வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை … Read more