2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 56 ரன் முன்னிலை..!

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 16 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 43 ரன்கள் எடுத்து உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியா -இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், முதலில் இந்திய அணி பெட்டிங் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து … Read more

பிஎஃப் விதிகளில் புதிய மாற்றம் செய்துள்ள மத்திய அரசு..!

மத்திய அரசு இந்த நிதியாண்டு முதல் பிஎஃப் கணக்குகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த நிதியாண்டு முதல் இரண்டு பிஎஃப் கணக்குகளை திறந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இரண்டரை லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள பிஎஃப் பங்களிப்புக்கு கிடைக்கக்கூடிய வட்டிக்கு வரி விதிக்கப்படுவதாக 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2.5 லட்சத்துக்கு அதிகமாக பிஎஃப் செலுத்துவோர் வரிக்குட்பட்ட பங்களிப்பு, வரிக்குட்படாத … Read more

ஆந்திராவில் புதிதாக 1,520 பேருக்கு கொரோனா..!

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று கொரோனா வைரசால் 1,520 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,520 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,18,200 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திரத்தில் இன்று மட்டும் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,887 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,290 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 19,89,391 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து … Read more

கேரளாவில் இன்று 29,322 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கேரள மாநிலத்தில் இன்று 29,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,322 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 22,938 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 131 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.  தற்போது கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 38,83,186 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,280 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 2 லட்சத்து 46 … Read more

“கடற்பசு பாதுகாப்பகம்” அமைக்கப்படும்-அமைச்சர் அறிவிப்பு..!

கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு “கடற்பசு பாதுகாப்பகம்” மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என  அறிவிக்கபப்ட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு “கடற்பசு பாதுகாப்பகம்” மன்னார் வளைகுடா, … Read more

2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் செலுத்தப்பட்ட இளைஞர்..!

மங்களூரு இளைஞருக்கு ஒரே நேரத்தில் இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் தவறுதலாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை அன்று கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தட்சிணகன்னடா மாவட்டத்தில் உள்ள தக்கலட்கா கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் நடந்த இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான மக்கள் பங்கு பெற்றுள்ளனர். இங்கு இருந்த கூட்ட நெரிசலில், கே.பி. அருண் என்ற 19 வயது இளைஞருக்கு முதல் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு செலுத்தியுள்ளனர். பின்னர் அதே அறையிலேயே … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-19 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,568 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,568 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,19,511 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 162 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,980 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,657 பேர் … Read more

#BREAKING: ஈமு கோழி மோசடி – பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை..!

ஈமு கோழிப்பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் “ஸ்ரீ குபேரன்” என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணையை கடந்த 2014-ஆம் ஆண்டு குமார் என்பவர் நடத்தி வந்தார். ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழி குஞ்சுகள் கொடுத்து, பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.7000 வழங்கப்படும் எனவும், 2 ஆண்டுகளில் முதலீடு தொகை கொடுக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை நம்பி 41 பேர் முதலீடு செய்யப்பட்டதில் ரூ. 62.5 லட்சம் பணத்தை பெற்று மோசடியில் … Read more

#BREAKING: பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற இந்திய வீரர்!

பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தியுள்ளார். வில்வித்தையில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 … Read more

கேரள மாணவி பிரதமர் மோடிக்கு அனுப்பிய பரிசு: என்ன தெரியுமா?

டெல்லி சென்ற பாஜக எம்.பி சுரேஷ் கோபி கேரள மாணவி அளித்த பரிசை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள குளநாடா கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி நாடு முழுவதும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த மாணவி அவரது கிராமத்தில் வளர்த்த கொய்யா செடியை, பிரதமர் மோடிக்கு பரிசாக டெல்லி சென்ற பாஜக எம்பி சுரேஷ் என்பவரிடம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இது … Read more