ஆரம்பிக்கலாமா.? விக்ரம் ஸ்டைலில் பிக் பாஸ் 5-இன் தெறிக்கும் ப்ரோமோ.!

பிக் பாஸ் சீசன் 5 தமிழின் ப்ரோமோவை கமல் ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் . அதன் பின் நான்காவது சீசன் கடந்த ஆண்டு முடிந்தது, அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது. … Read more

கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..!

கேரள மாநிலத்தில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 20,687 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 115 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20,788 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் குணமடைந்து இதுவரை 37,17,004 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா சிகிச்சையில் 2,18,892 … Read more

இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம்..!-ஹிமாச்சலப்பிரதேசம்..!

இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாச்சலப்பிரதேசம் மாறியுள்ளது. இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஹிமாச்சல் அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஹிமாச்சல் பிரதேசம் இந்தியாவிலேயே இளைஞர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ காரணமாக இருந்த அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.  பிரதமர் மோடி … Read more

Elon Musk’s Tesla:இந்திய முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. டெஸ்லா நிறுவனத்திற்கு ஒப்புதல்..!

டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு கார் மாடல்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவில்,பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால்,பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், எலக்ட்ரிக் வாகனம் மற்றும் கார் தயாரிப்புகளில் உலகளவில் முன்னிலையில் உள்ள நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க திட்டமிட்டு ,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக … Read more

சவுதி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் – 8 பேர் காயம்!

சவுதி அரேபியா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.  ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்  , ஏமன் நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் ஆதரித்து வருகிறது. மேலும்,  ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான … Read more

வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட முடியும்…! சீனா அரசு அதிரடி…!

சீனாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட முடியும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.  இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழுகிறது. அந்தவகையில் பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளங்கள் தான். தங்களது அதிகமான நேரத்தை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இணையதளங்களில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழலில் குழந்தைகள் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள இளைஞர்கள் … Read more

#BREAKING: உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி வென்றார்..!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு 2 பதக்கம் வென்றது. இதில், நுழையில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கபதக்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றார்.  சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார்.  மாரியப்பன் தங்கவேலு கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கிலும் உயரம் தாண்டுதல் … Read more

மெக்சிகோவில் கிரேன் விபத்து..!-5 பேர் பலி..!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கிரேன் விழுந்து 5 கட்டட பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள மெக்சிகன் நகரில் சான்டா லூசியா ராணுவ தளத்தில் எகாடெபெக் டி மொரிலோஸ் நகராட்சியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அப்பகுதியில் பெலிப் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் காரணத்தால் இந்த பாலம் நடைபெறும் பணி உள்ளது. இந்த பாலத்தின் வலுவிற்காக இதில் ஸ்டீல் பார்கள் வைக்கும் பணி நடைபெற்று … Read more

அனைத்து கல்லுரிகளும் நாளை திறப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த அனைத்து யுஜி, பிஜி மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை தொடக்கம் என அறிவிப்பு. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த அனைத்து யுஜி மற்றும் பிஜி மாணவர்களுக்கான வகுப்புகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நாளை முதல் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. அனைத்து கல்லூரிகளின் டீன்களும், பிராந்திய வளாகங்கள் மற்றும் அரசியலமைப்பு கல்லூரிகளின் டீன், … Read more

#BREAKING: பதக்கத்தை உறுதி செய்த மாரியப்பன் தங்கவேலு சரத்குமார்,..!

உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார் இருவரும் பதக்கத்தை உறுதி செய்தனர். மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தில் உள்ளார்.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இதுவரை இந்திய வீரர் வீராங்கனைகள் 2 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா 5 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் 2 தங்கங்களும் அடக்கம். டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் … Read more