நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்த நயன்தாரா..!

பிரபல நடிகை நயன்தாரா, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது இவரது நடிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களது … Read more

இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கொரோனா – லூதியானா..!

லூதியானாவில் இருக்கும் இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா தொற்று இந்தியாவில் வேகமெடுத்து பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததை அடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு மாநிலங்கள் முடிவெடுத்து வருகின்றன. இதனையடுத்து லூதியானாவில் கடந்த ஜூலை 26 முதல் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளோடு பள்ளிகள் தொடங்கப்பட்டன. தற்போது லூதியானாவில் உள்ள இரண்டு பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து … Read more

நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா-மத்திய அரசு..!

நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்று உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, கப்பா என்று பல வகைகளில் பரவி வருகிறது. இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,893 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-27 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,893 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,893 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,79,130 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 209 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,367 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,930 பேர் … Read more

பொதுஇடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டினால் அபராதம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் கட்டிடம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை … Read more

எஸ்.பி.வேலுமணியிடம் நடத்திய விசாரணை நிறைவு.., பணம், ஆவணங்கள் பறிமுதல்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்தமான இடங்களில் 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கோவையில் 42, சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 2 … Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு-மத்திய அரசு..!

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் இது குறித்து தெரிவித்ததாவது, கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இருக்கக்கூடிய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை ஆகும். கேரளாவில் 11 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் கர்நாடகத்தில் 5 மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது. … Read more

மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும்? – மத்திய அரசு பதில்!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என மத்திய அரசு தெரிவித்தாக தகவல். மதுரை தோப்பூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மருத்துவமனை கட்டுவதற்காக முதல்கட்டமாக கணிசமான தொகையை வழங்குவதாக ஜப்பான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தற்போது அந்த மருத்துவமனையின் திட்ட அதிகாரிகள் நியமன பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தெரிவித்தாக மத்திய அரசு தகவல் … Read more

வேளாங்கண்ணி பேராலய விழா – பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் உத்தரவு. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட தாங்கும் விடுதி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ம் … Read more

சீனாவின் புகழ்பெற்ற யானைக்கூட்டம் சொந்த வசிப்பிடத்தை நெருங்கியது..!

உலகளவில் ஈர்க்கப்பட்ட சீனாவின் புகழ்பெற்ற யானைக்கூட்டம் தற்போது அதன் சொந்த வாழிடத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் வசித்து வந்த 15 யானைகள் கடந்த ஜூன் மாதத்தில் அதன் வாழ்விடத்திலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சுற்றி திரிந்து வந்தது. இந்த யானைக்கூட்டம் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நடமாட தொடங்கியது.  யானைக்கூட்டங்கள் ஒன்றாக சுற்றி திரிந்து பல விளைநிலங்களை சேதப்படுத்தவும் செய்தது. மக்கள் வாழ்விடங்களில் புகுந்து பல சேட்டைகளும் செய்தது. … Read more