அதிகரிக்கும் கொரோனா தொற்று : டோக்கியோவில் அவசரநிலை நீட்டிப்பு….!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே, ஒலிம்பிக் … Read more

இன்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம்..!

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை நடைப்பெறுகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக, கிராமசபை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று (15-08-2021) கிராமசபைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு கொடுக்கும் நிகழ்வை 02-08-2021 அன்று நாம் … Read more

என்னை பற்றி வெளியான செய்தி முற்றிலும் வதந்தி – ஷகிலா..!

ஷகிலா இறந்து விட்டதாக வதந்தி செய்திகள் பரவி வந்த நிலையில், இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் அழகிய தமிழ் மகன், பாஸ் என்ற பாஸ்கரன், மாஞ்சா வேலு, ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஷகிலா. இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 – வில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் மட்டுமில்லாம, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளும் … Read more

குட்நீயூஸ்..அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு – விவரம் கோரிய டிஎன்பிஎஸ்சி..!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 (தொகுதி – 1) அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களில், தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விவரம் கேட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் கடந்த 03,01,2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 (தொகுதி – 1) அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள்,தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விவரம் கோரியுள்ளது.அதன்படி,குரூப் -1 முதல்நிலைத் … Read more

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டு கொலை…!

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக திடீரென இருவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பலமுறை எச்சரித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கேட்காமல் தொடர்ந்து முன்னேறிக் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க 3 கிரிக்கெட் வீரர்களுக்கு தடை;தலா ரூ.37 லட்சம் அபராதம் ..!

இலங்கை வீரர்கள் தனுஷ்கா குணதிலகா, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகிய 3 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஓர் ஆண்டு தடை மற்றும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இலங்கை அணி ஒருநாள் தொடர்களில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.கொரோனா காரணமாக,உயர்பாதுகப்புடன் பயோ-பபிள் சூழலில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. விதி மீறல்: இந்த நிலையில்,இலங்கை வீரர்கள் தனுஷ்கா குணதிலகா, குசல் மெண்டிஸ் மற்றும் … Read more

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விக்ரம்.! படத்தில் இணைந்த நடிகர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விக்ரம் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.  நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 16- ஆம் தேதி … Read more

வாட்ஸ்அப்பிற்கு எதிராக நிர்வாக நடவடிக்கைகளை எடுத்த ரஷ்யா!!

ரஷ்யாவில், ரஷ்ய பயனர்களின் தரவுகளை உள்ளூர்மயமாக்க தவறியதற்காக வாட்ஸ்அப்பிற்கு எதிராக ரஷ்ய நிர்வாக நடவடிக்கை. ரஷ்ய பயனர்களின் தரவுகளை (localise data) உள்ளூர்மயமாக்க தவறியதற்காக ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் மீது ரஷ்யா நிர்வாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேஸ்புக்கிலிருந்து உடனடி கருத்து எதுவும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் WhatsApp ஆவணங்களுக்கு $ 13,700 முதல் $ 82,250 வரை அதாவது, 1 மில்லியன் முதல் 6 மில்லியன் ரூபிள் வரை … Read more

அண்ணாத்த படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த சூப்பர் ஸ்டார்.!

அண்ணாத்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்  உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் ரஜினிகாந்த் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. … Read more

‘என்னைய மன்னிச்சிக்கோங்க அம்மா’- ஆன்லைன் கேமில் 40,000-ஐ இழந்த 6-ம் வகுப்பு சிறுவன் தற்கொலை…!

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கேமில் ரூ.40,000-ஐ இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் மொபைல் போன் உள்ளது. இதனை சிலர் நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தினாலும், சிலர், அதனை தீய வழிகளிலும் பயன்படுத்துகின்றனர். மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில், 6-ம் வகுப்பு பயின்று வரும் நோயியல் ஆய்வக உரிமையாளரின் மகன், இவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை … Read more