நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் தாஜ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும் – உயர்நீதிமன்றம் அதிரடி

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரயில்வே நடைபாதைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரயில்வே நடைபாதை கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு … Read more

மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறை – அமைச்சரவை ஒப்புதல்!

மக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்காக ரீசார்ஜ் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பேசப்பட்டதுடன் மின் கட்டணம் குறித்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. மின் இழப்புகளை குறைப்பது, நுகர்வோருக்கு தரமான மற்றும் நம்பகமான மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவது குறித்த திட்டம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த திட்டம் என்னவென்றால் விவசாய மின் இணைப்பு தவிர்த்து மற்ற அனைத்து … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பின் முழு விவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,005 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,04,10,577 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 3 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,04,10,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1005 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை … Read more

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக முதல்வர் தனது ட்வீட்டர் பக்கத்தில், இது மக்களின் அரசு, மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும். நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும், துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். … Read more

மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமிதம் கொள்கிறது – பிரதமர் வாழ்த்து!

கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் புகழ்பெற்ற மருத்துவருமான பிதன் சந்திரராய் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வருடம் தோறும் ஜூலை 1-ஆம் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பிதன் சந்திரராய் அவர்கள் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை ஒன்றாம் தேதி தான்.  எனவே, இன்றைய நாள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்குமான நாளாக கருதப்பட்டு வரும் நிலையில், பலரும் … Read more

தேங்காய் இல்லாமல் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான குருமா எப்படி செய்வது?

எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம். தேவையான பொருட்கள் சோம்பு பச்சைமிளகாய் வெங்காயம் எண்ணெய் … Read more

ரேஷனில் இன்றுமுதல் மீண்டும் கைரேகை நடைமுறை -தமிழக அரசு

இன்று முதல் ரேஷனில் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் ரேஷனில் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி, புதிய கார்டுக்கு ஒப்புதல் தரும் சேவையும் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண … Read more

இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – உத்தரகண்ட்!

இன்று முதல் உத்தரகாண்டில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளதால் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல மாநிலங்களில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு, இணைய வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணைய வகுப்புகளுக்கும் உத்தரகாண்டில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த  நிலையில் இந்த விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, மீண்டும் இணைய வழி வகுப்புகள் தொடங்குவது குறித்த … Read more

இன்றைய (01.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: உங்கள் வளர்ச்சியில் மிதமான பலன்களைக் காண்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண பொறுமையும் உறுதியும் அவசியம். நேரமின்மை காரணமாக உங்கள் பணியில் தாமதம் காணப்படும். ரிஷபம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களிடம் ஆற்றல் அதிகமாக காணப்படும். இதன் மூலம் நீங்கள் சுய முன்னேற்றம் காண்பீர்கள். நேர்மறையான மாற்றங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மிதுனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு போதிய அதிர்ஷ்டம் காணப்படும். நீங்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் … Read more