மாநிலங்களிடம் 3.14 கோடிக்கும் அதிகமான டோஸ் உள்ளது- மத்திய அரசு..!

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3.14 கோடிக்கும் அதிகமான டோஸ் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3.14 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 48.78 கோடிக்கும் அதிகமான டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 68,57,590 டோஸ் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றில், வீணான டோஸ் உட்பட மொத்தம் 45,82,60,052 டோஸ் … Read more

அசாம் மாநில முதல்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு…!

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா மற்றும் 6 உயரதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கிடையே சமீப நாட்களாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சினை கடந்த 26-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் இரு மாநிலத்தை சேர்ந்த மக்களும், காவல்துறையினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் அசாம் காவல்துறையினர் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உள்துறை அமைச்சர் அவர்கள் இரு மாநில முதல்வர்களிடமும்  … Read more

TOKYO2020:பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையிடம் போராடி தோற்ற பிவி சிந்து..!

இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் அரையிறுதி போட்டியில்,உலகின் நம்பர் 1 வீராங்கனை தாய் சூ-யிங்கிடம்,பிவி சிந்து  தோல்வியுற்றார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வெறும் 41 நிமிடங்களில்: அதன்படி,முன்னதாக நடைபெற்ற பேட்மிண்டன் 16 வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வெறும் 41 நிமிடங்களில் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் … Read more

அதிரடி சண்டைக் காட்சி.! பீஸ்ட் திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்.!

பீஸ்ட் படக்குழு அதிரடி சண்டைக் காட்சிககளை படமாக்க ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு … Read more

மத்திய அரசுக்கும்‌, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – தேமுதிக தலைவர், விஜயகாந்த்

மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட். எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 27 சதவீதமும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. நீண்ட சட்ட போராட்டம், அரசியல் … Read more

கல்லூரி நிறுவனர் சிலையின் தலை மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் …!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனர் ராஜா முத்தையா சிலையின் தலையின் மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனராகிய ராஜா முத்தையா செட்டியார் அவர்களின் முழு உருவச்சிலை இந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிலையின் தலையின் மேல் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் சிலர் தங்களுடன் பயிலக்கூடிய … Read more

கொரோனா 3-வது அலை அதிக அளவிலான வைரஸை பரப்பும் – கே.விஜய ராகவன்

கொரோனா வைரசின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இது அதிக அளவிலான வைரஸை பரப்பும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக  பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பரவக் கூடும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் … Read more

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை எப்போது? – அமைச்சர் அளித்த விளக்கம்!!

பெண்களை மையப்படுத்தித்தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்று வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதில், குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம், ஆகிய வாக்குறுதிகள் மக்களை கவரும் வகையில் இருந்தது. சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், புதிய முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே, கொரோனா நிவாரண … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் பூஜா ராணி தோல்வி..!

ஒலிம்பிக குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் பூஜா ராணி தோல்வியடைந்தார். சீன வீராங்கனை லி கியூனிடம் 5-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வியை தழுவினார்.

மீண்டும் சிரிக்க தயாராகுங்கள்.! குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!

குக் வித் கோமாளி கொண்டாட்டம் என்று விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு சென்றது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றோன்று, இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைய காரணம் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது. பிக் பாஸ் … Read more