வீடியோ: விம்பிள்டன் போட்டியில் காயம் ஏற்பட்டதால் முதல் சுற்றிலேயே கண்ணீருடன் வெளியேறிய செரீனா!

விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்று போட்டியிலேயே வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து அழுகையுடன் அவர் வெளியேறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆண்டுதோறும் 4 வகையான அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய டென்னிஸ் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது மிகப்பெரிய விம்பிள்டன் … Read more

கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் பரிந்துரை…! அர்ஜுனா விருதுக்கு ஷிகர் தவான், ராகுல் பரிந்துரை…!

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரையும், அர்ஜுனா விருதுக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.  தேசிய அளவில் விளையாட்டுத் துறையில், சிறந்த முறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய மிக உயரிய விருது தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்திய பிரதமர், மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக … Read more

சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்-முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது என் வீட்டில் மருத்துவர்களின் அறிவுரையின்படி தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். இன்னும் 15 நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் என்னை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம். … Read more

கோவாக்சின் தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில் அரசு – காரணம் என்ன?..!

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்ததை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு அனுமதி வழங்கியது.அதன்படி,பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு தடுப்பூசிகளை வாங்கவும் பிரேசில் அரசு முடிவு செய்தது. ஆனால்,பிரேசிலில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 500,000 ஐ … Read more

என் மனைவியை காணவில்லை…. கொள்ளையடிக்க சென்ற போது வங்கிக்குள் மாட்டிக்கொண்ட பெண்!

காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த 40 வயது பெண்மணி வங்கிக்குள் பூட்டப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேகலாயாவை சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவரை காணவில்லை என அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்மணி வீட்டில் காய்கறி வாங்க சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். அவர் சனிக்கிழமை இரவாகியும் வராததால் பதற்றம் அடைந்துள்ளனர். ஆனால், பெண்மணி காணாமல் போகவில்லை அவர் ஒரு வங்கியில் பணத்தை திருடுவதற்காக வங்கிக்குள் ஒழிந்த நிலையில் இருந்துள்ளார். அந்தப் … Read more

சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலில் இயங்கிய பறக்கும் கார்..!

ஸ்லோவேகியாவின் பிராடிஸ்லாவா மற்றும் நைட்ராவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலின் மூலம் இயங்கும் பறக்கும் கார் 35 நிமிடம் பறந்துள்ளது. பறக்கும் காரை தயாரித்த பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் இது குறித்து கூறுகையில், இந்த பறக்கும் கார் சுமார் 1,000 கி.மீ. தொலைவு, 8,500 அடி உயரத்தில் பறக்கும் என்று  கூறியுள்ளார். இந்த பறக்கும் காரில் பிஎம்டபிள்யூவின் வழக்கமான என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது பெட்ரோல்-பம்ப் மூலமாக இயங்குகிறது.  இதை காராக நாம் பயன்படுத்தியதை … Read more

கைதி முத்து மனோவின் உடலை ஜூலை 2-க்குள் பெற வேண்டும் -மதுரைக் கிளை உத்தரவு..!

ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என மதுரைக் கிளை உத்தரவு.  திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவர்  ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக களக்காடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். பின் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி மற்றொரு வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சக கைதிகளால் தாக்கப்பட்ட … Read more

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி சிவகங்கை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு, மத்திய மேற்கு … Read more

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.., 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ..!

ஜம்மு காஷ்மீர் குல்காம் அருகே நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் சிம்மர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். அதேசமயம், முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு, தேடல் நடவடிக்கையை  பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சிம்மர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தேடல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது, ​​பயங்கரவாதிகள் துப்பாக்கிச் … Read more

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்டின் பதவிக்காலம் நீட்டிப்பு..!

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்டின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் பொது கொள்கை சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கான்ட் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து,இந்த பதவிக்காலம்  2019 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மீண்டும் நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை பதவிக்காலம் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,30.06.2021 முதல் 30.06.2022 … Read more