கொரோனா தடுப்பூசியால் ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படாது-மத்திய அரசு..!

கொரோனா தடுப்பூசி போடுவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக வதந்திகள் பரவுகின்றன. இந்நிலையில் இந்த வதந்திக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாது என்றும் இது பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசியை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்ளலாம் எனவும் … Read more

90 நிமிடங்களில் கொரோனா இருப்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் முகக்கவசம்..!

கொரோனா இருப்பதை துல்லியமாக 90 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் வகையில் அமெரிக்க ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக அறிஞர்கள் நவீன முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரிசோதனையை முகக்கவசம் வாயிலாக அறிந்துகொள்ளும் வகையில் புதிய தொழிநுட்பத்துடன் மாஸ்க் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகம் … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-113 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 4,506 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,506 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,79,696 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 257 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 113 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,619 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 5,537 பேர் … Read more

கொரோனாவில் இறந்தவர்கள் உடலுக்கு 1 மணிநேர இறுதி சடங்கு – கேரள அரசு அனுமதி..!

கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு வீட்டில் வைத்து ஒரு மணிநேரம் இறுதிச்சடங்கு செய்ய கேரள அரசு அனுமதியளித்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,  கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நாளிலிருந்து மக்கள் பலவிதமான சங்கடங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். முக்கியமாக உயிரிழந்தவர்களின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து இறுதிச்சடங்கு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை … Read more

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு. தியாகராஜ பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகை குடியிருப்பு மற்றும் 5 லட்சம் நிதியுதவி  வழங்கப்படும் எனதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.கே.டி.” என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு எம்.கே தியாகராஜ பாகவதர் அவர்கள், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத … Read more

முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமனம் ..!

முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவுக்கான சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதலாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கான சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர்வி.பி ஜெயசீலனுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு;ஒரு பக்கம் குழந்தையை கிள்ளி விட்டு மறுபக்கம் தொட்டிலை ஆட்டும் திமுக- ஓபிஎஸ்..!

நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு காரணமாக இருந்துவிட்டு,தற்போது அதை எதிர்க்கும் திமுகவின் செயலை நினைத்தால்,ஒரு பக்கம் குழந்தையை கிள்ளி விட்டு மறுபக்கம் தொட்டிலை ஆட்டும் பழமொழி நினைவுக்கு வருகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் திமுக: ஒரு பக்கம் ‘நீட் தேர்வு’ என்பதற்கு மூலக் … Read more

3,60,000 கிராமங்களுக்கு பாரத் நெட் இணைப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல் ..!

16 மாநிலங்களில் 3,60,000 கிராமங்களில் இணையதள இணைப்பு  திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 மாநிலங்களில் உள்ள 3,60,000 கிராமங்களில் பாரத்நெட் மூலம் இணையதள இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அரசு-தனியார் கூட்டாண்மை மூலம் பாரத்நெட் திட்டத்தை இயக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் இன்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு ரூ .19,041 கோடி அனுமதி … Read more

#Breaking:எய்ம்ஸூக்கு சரியான இடம் வழங்கினால் உடனே பணிகள் தொடங்கப்படும் -மத்திய அரசு..!

மதுரை எய்ம்ஸூக்கு சரியான இடத்தை தமிழக அரசு வழங்கினால் உடனே பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர்,மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மேலும்,அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2018-ல் அறிவித்தது.பின்னர் 2019 ஆம் ஆண்டு பிரமர் மோடி நேரில் வந்து … Read more

முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பிரிவு உபசாரவிழா…!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெறும் திரிபாதி அவர்களுக்கு, பிரிவு உபசார விழா  நடைபெற்றது. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிபாதி அவர்கள், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1985-ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றி காவல்துறை சட்டம் ஒழுங்கு பணிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக திகழ்ந்துள்ளார். அதனை தொடர்ந்து சென்னைக்கு மாற்றப்பட்ட இவர் தென் சென்னை … Read more