பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி முடிவு செய்ய குழு..!

மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும். குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்கப்படும். பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக் கேட்பு அறிக்கையை இன்று மாலை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம்  சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து, மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து முடிவு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். பிளஸ் டூ தேர்வு … Read more

#Breaking: தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – அரசு உத்தரவு…!

27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் . தமிழக அரசு உத்தரவு. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,மீண்டும் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, எஸ்.பி.க்களாக : செங்கல்பட்டுக்கு- விஜயகுமார் நியமனம். காஞ்சிபுரத்திற்கு – சுதாகர் திருப்பத்தூர்க்கு- சிபி சக்கரவர்த்தி, ராணிப்பேட்டைக்கு – ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலைக்கு – பவன்குமார் ரெட்டி, விழுப்புரத்திற்கு – ஸ்ரீநாதா, கடலூர்க்கு- சக்தி … Read more

#BREAKING: தமிழகத்தில் +12 தேர்வு ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு. சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் … Read more

தமிழகத்தில் இன்று 21,406 பேருக்கு கொரோனா பாதிப்பு.., 443 பேர் உயிரிழப்பு .!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 21,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதிகபட்சமாக கோவையில் மட்டும் இன்று 988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக 21,406 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,16,812 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் மட்டும் இன்று 2,663 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,85,371 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை … Read more

#Breaking:”மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது” – டாஸ்மாக் மேலாண் இயக்குனர்

தமிழகத்தில் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை ஊரடங்கை மேலும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்,அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த,கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு … Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாமக்கல், கோவை, நீலகிரி பெரம்பலூர், கடலூர், சேலம், ஆகிய 18 … Read more

#BREAKING : ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன், அப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் … Read more

முட்டைக்கோஸ் வேக வைத்த நீரில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறியலாம் வாருங்கள்!

உணவே மருந்து என்பது போல நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக முட்டைகோஸ் வேகவைத்த நீரில் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கிறது, அவற்றை பற்றி அறியலாம் வாருங்கள். நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய முட்டைகோஸில்  எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. இருப்பினும் இந்த முட்டைக்கோஸை  சாதாரணமாக நாம் உணவுடன் சாப்பிடுவதை விட, முட்டைகோஸை வேகவைத்து அதின் நீரை எடுத்து … Read more

மே மாத ஜிஎஸ்டி ரூ.1.02 லட்சம் கோடி வசூல்- மத்திய நிதியமைச்சகம் ..!

மே மாதத்தில் ஜிஎஸ்டி ரூ. 1,02,709 கோடி  வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாத ஜிஎஸ்டியை விட இந்த ஆண்டு 65% கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு 65 % கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு நிதியுதவி – எம்.பி. கனிமொழி..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற, துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 94 பேர்களில்,93 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் பலியான நபரின் தாயாருக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவியாக எம்.பி.கனிமொழி வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில்,பின்னர் அது வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து,போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் … Read more