உ.பி.: பல் மருத்துவருக்கு கத்தி குத்து – 21 வயது இளைஞன் கைது!

உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவரை கத்தியால் குத்திய நபர் கைது…சிறிது நேரம் காத்திருக்க கூறியதால் இளைஞன் சீற்றம்! உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவர் 21 வயதுள்ள ஒரு இளைஞனால் கத்தி கொண்டு தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பேரில் உ.பி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை கைது செய்துள்ளனர். அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில்  ஜார்ச்சா கிராமத்தில் வசிக்கும் முகமது குமாயிலிற்கு (21) பல்வலி ஏற்பட்டதை அடுத்து பல் மருத்துவர் அஜய் … Read more

மகாராஷ்டிராவில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கை ஜூன் 15 வரை நீடித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் முதல் அலையின் உச்ச பாதிப்பு அளவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மக்களை பாதித்துள்ளது. அதனால் ஊரடங்கை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளோம். மேலும், அத்தியாவசிய பொருட்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை இருக்கும் நிலையில் காலை 7 மணி … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வளிமண்டல சுழற்சியால் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆகிய  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் வருகின்ற ஜூன் 2ஆம்  தேதி கன மழை பெய்யலாம், எனவும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம்,  … Read more

கொரோனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை – முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர்

கொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை – ஐசிஎம்ஆர் நிபுணர் விளக்கம் ! உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி லட்சக்கணக்கில் உயிர்களை பலி வாங்கியுள்ளது, இது முதன் முதலான சீனாவில் வுஹான் என்ற நகரத்திலிரந்து பரவியதாக கூறப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா இயற்கையாக உருவாக்கப்பட்டது இல்லை என்றும் அது சீனா வுஹான் நகரத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்துதான் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி உலகெங்கும் பரவி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக … Read more

ஒரு வார்த்தையில் தோனியை புகழ்ந்து கூறிய விராட் கோலி..!!

நம்பிக்கை மற்றும் மரியாதை என்றால் அது தோனி தான் என்று விராட் கோலி  தெரிவித்துள்ளார்.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் எஞ்சியுள்ள 31 போட்டிகள் கொண்ட ஐபில் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தின், குவைத், சார்ஜா மற்றும் அபுதாபியில் … Read more

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு..!

கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், பதக்கமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “ கல்பனா சாவ்லா விருது ” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் , சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த … Read more

“மனித நேயத்தின் மறுபதிப்பாக செயல்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு” – வைகோ பாராட்டு..!

மனித நேயத்தின் மறுபதிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளமான குழந்தைகள் அதரவின்றி உள்ளனர். இதன்காரணமாக,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு … Read more

#BREAKING: ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி..!

போக்சோ நீதிமன்றம் ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்ததுள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற … Read more

ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள தளர்வில் எந்த மாற்றமுமில்லை.  புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  15,000 க்கும் கீழாக சென்றுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக  ஜூன் 10 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .தற்போதைய நடைமுறையில் உள்ள தளர்வு, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட … Read more

#BREAKING: பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தடை இல்லை- உயர்நீதிமன்றம் உத்தரவு…!

பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் சார்பில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 20 ஆயிரம் டன் பருப்பு 80 லட்சம் லிட்டர் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த டெண்டர் அறிவிப்பில் முந்தைய நிபந்தனைகள் பின்பற்றாமல் … Read more