#BREAKING: மே மாத நிவாரணத்தை வாங்காதவர்கள் ஜூனில் வாங்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு.!

ரூ.2000 இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் கொரோனா நிவாரண தொகையான 4,000 ரூபாயில் முதல் தவணை ரூ.2000 இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல … Read more

பிரித்விராஜ்ஜின் டிவீட்டிற்கு ஆதரவு அளித்த கேரள முதல்வர்..!

லட்சதீவின் சீர்திருத்தங்களை எதிர்த்ததற்காக சைபர் தாக்குதலை சந்தித்த கேரள திரைப்பட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் சீர்திருத்தத்திற்கு எதிராக ட்வீட் செய்த நடிகர் பிரித்விராஜ் மீது லட்சத்தீவின் வலது சாரிகள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர் பிரித்விராஜ் வெளிப்படுத்திய உணர்வுகள் கேரள மக்களின் உணர்வு, பிரித்விராஜ் அதனை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் என்று அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். நடிகர் … Read more

அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

அமெரிக்காவில் இன்று பிற்பகல் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகரத்திற்கு வடக்கில் 74 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று பிற்பகல் 12.29 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் கீழ் 41.3 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுகள், பொருளிழப்புகள் குறித்த தகவல் இன்னும் … Read more

திருநெல்வேலியில் முக கவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து  41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமல் படுத்தபட்டிருந்த ஊரடங்கு மேலும் 1 வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறியவர்கள் மீது … Read more

ட்விட்டர் நிறுவனம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்-டெல்லி உயர் நீதிமன்றம்…!

மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.சர்ச்சைக்குரிய … Read more

#BREAKING: கெபிராஜை ஜூன் 14 வரை சிறையிலடைக்க உத்தரவு..!

கெபிராஜை வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு  வெளிவந்தன. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் … Read more

‘டார்ஸான்’ பட நடிகர் ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்தார்.!

பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா விமான விபத்தில் உயிரிழந்தனர். கடந்த 1989 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி திரைப்படமான டார்சன் இன் மன்ஹாட்டனில் டார்சானாக நடிகர் ஜோ லாரா நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து 1996-1997 வரை  டார்சன் தி எபிக் அட்வெஞ்சர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து … Read more

#BREAKING: அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை ,15 வகை மளிகைப்பொருட்கள் அறிவிப்பு..!

அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள்,பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000 க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு … Read more

ஹலோ.. நான் சசிகலா பேசிறேன் …! தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி- கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு…!

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்வதாக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அதில்,”கஷ்டப்பட்ட வளர்த்த கட்சி வீணாவதை என்னால் ஒருபோதும் பார்த்து கொண்டிருக்க முடியாது.கொரோனா முடிந்ததும் மீண்டும் வருவேன்.கட்சியை சரி செய்து விடலாம்.எனவே,தைரியமாக இருங்கள்”, என்று சசிகலா கூறியிருந்தார். முன்னதாக,அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கூறிய சசிகலா தற்போது இவ்வாறு கூறியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனஹள்ளி … Read more

நடிகை பிரணிதா திடீர் திருமணம்..!!

நடிகை பிரணிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகை பிரணிதா தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சகுனி, மாஸ் என்ற மாசிலாமணி, போன்ற திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை பிரணிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் … Read more