மகிழ்ச்சி செய்தி: டெல்லியில் குறைந்த கொரோனா.. பாசிட்டிவ் ரேட் 1% கீழ் குறைவு.!

டெல்லியில் குறைந்து வருகிறது கொரோனா,புதிய பாதிப்பு 648 ஆக பதிவு – டெல்லி அரசு தகவல் . டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் கனிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 648 பேர் கொரோனாவல் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.99 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,26,240 பேராக அதிகரித்துள்ளது, மேலும் இன்று … Read more

ஒரே நாளில் கோவையில் 978 ஊரடங்கு வழக்குகள்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது கோயம்பத்தூர். இங்கு ஒரே நாளில் 978 ஊடங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஊரடங்கில் தேவையின்றி வெளியில் செல்பவர்கள் மீது கோவை காவல் துறையினர் நேற்று ஒரே நாளில் 978 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கோவையில் தொற்று எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஊரடங்கின் நோக்கம் புரியாமல் மக்கள் வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த … Read more

ஜூன் 3 முதல் 5 வரை  தடுப்பூசி போடப்படாது -தமிழக சுகாதாரத்துறை செயலாளர் !

ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது என  சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் தயக்கம் இருந்த நிலையில் பின்னர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்நிலையில், சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

தமிழகத்தில் 10 வது நாளாக குறைந்துவரும் கொரோனா… அதிகரிக்கும் உயிர் பலி..புதியதாக 27,936 பேர் பாதிப்பு…. 478 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 27,936 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,96,516 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,596 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 478 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் … Read more

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டிய நபர் பற்றி காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

“பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வரின் செயல்பாடு உள்ளது”-சரத்குமார் பாராட்டு!

பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு உள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பாராட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி,திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் … Read more

ஆம்பூரில் சரக்கு ரயில் மோதி 2 ரயில்வே ஊழியர்கள் உயிரிழப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிக்னல் கோளாறை சரி செய்து விட்டு ஸ்டேஷனுக்கு திரும்பிய 2 ரயில்வே ஊழியர்கள் மீதி சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் உள்ள பெங்களூர்-சென்னை வழித்தடத்தில் கனமழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு உள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பிரச்சனையை சரி செய்ய, ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகார் மாநில டெக்னீசியன் பர்வேஸ் குமார் ஆகிய இருவரும் கொட்டும் மழையில் சென்று சிக்னல் … Read more

மேற்குவங்க முதல்வரின் ஆலோசகராக ஆலாபன் நியமனம்..!

ஆலாபன் பந்தோபத்யாய இன்று பணியில் இருந்து ஒய்வு பெறுவதை அடுத்து புதிய பொறுப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். மேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி காத்திருக்க வைத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. தாமதமாக வந்ததுடன் மம்தா பானர்ஜி பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார். அடுத்த சில மணி நேரத்தில் அம்மாநில தலைமை செயலாளர் ஆலாபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு திரும்ப … Read more

இரு குழந்தைகளைப் பாதித்த கருப்பு பூஞ்சை., கண்ணை இழந்த சோகம்..!

கர்நாடகாவில் முதன்முறையாக குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு….கண்ணை இழந்து தவிக்கும் குழந்தைகள். இந்தியாவில் கொரோனா கடந்த ஆண்டு முதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதன் விளைவாக ஆங்காங்கே மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தனர்.  இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸின் 2 வது அலை மக்களிடையே பரவி வாட்டி வதைத்த நிலையில் தற்போது கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என பூஞ்சை தொற்றுகள் கலர் கலராக பரவி மக்களை அச்சுருத்தி வருகிறது. கொரோனா 3 வது அலையே குழந்தைகளை பாதிக்கும் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சூதாடிய 4 பேர் கைது..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தென்பாகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொட்டிருந்தார். அப்போது  தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த ஜேசுராஜ், திலீப்குமார், மாரிமுத்து செல்சினி காலனியை சேர்ந்த சந்தியாகு, ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அவர்கள் சூதாட்டம் விளையாடி வந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து … Read more