ஹஜ் யாத்திரை செல்ல 2 தவணை தடுப்பூசி அவசியம்..!

ஹஜ் புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். தடுப்பூசி கட்டாயம் என்று சவுதி சுகாதார அமைச்சர் தெரிவித்ததால், ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி 2 தவணை தடுப்பூசி அவசியம் என அறிவித்தார். இந்தியாவிலிருந்து ஜூன் மாதத்தில் ஹஜ் புனித யாத்திரைக்கான விமானங்கள் இயக்கப்படும். ஹஜ் புனிதப் பயணம் … Read more

உ.பி.யின் கான்பூரில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி,இரண்டு பேர் காயம்

உத்தரபிரதேச கான்பூரில் உள்ள பங்கி ஆக்ஸிஜன் ஆலையில் வெள்ளிக்கிழமை காலை நிரப்பப்பட்டபோது ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் ஒரு தொழிலாளி உயிரிழப்பு , இரண்டு பேர் காயம்.தாதா நகர் தொழில்துறை பகுதியில் இந்த  சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர் மறு நிரப்பலின் போது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் ஆக்ஸிஜன் ஆலை தொழிலாளி இம்ராட் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த ஒருவர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், … Read more

கொரோனா எதிரொலி..!சர்வதேச விமானங்களுக்கு மே 31 ஆம் தேதி வரை தடை – டிஜிசிஏ உத்தரவு..!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக சர்வதேச விமானங்களுக்கு மே 31 ஆம் தேதி வரை தடை விதித்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கையானது 3,00,000க்கும் அதிகமாக உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ), வெள்ளிக்கிழமையன்று சர்வதேச விமானங்களுக்கு  தடை விதித்து அதனை மே 31 வரை நீட்டித்துள்ளது. அதாவது,சர்வதேச பயணிகள் சேவை விமானங்கள் இந்தியாவில் இருந்து … Read more

சம்பளத்தில் ஒரு பகுதியை மருத்துவ உதவிக்காக கொடுத்த நிக்கோலஸ் பூரன்..!!

இந்திய மக்களின் மருத்துவ உதவிக்காக நிக்கோலஸ் பூரன் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை நிதியுதவி கொடுத்துள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது. பலர் … Read more

கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை “நோபால்” வீசாத 5 சிறந்த பந்துவீச்சாளர்கள்!

கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். கிரிக்கெட் என்பது, அனைவரும் அறிந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல சாதனைகளை முன்னாள் ஜாம்பவான்களும், தற்பொழுதுள்ள வீரர்கள் படைத்து வருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். 1. எல் கிப்ஸ் (L Gibbs): மேற்கு இந்திய அணியின் … Read more

கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட இந்த ஜூஸ் குடிங்க….!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பீட்ரூட் ஸ்மூத்தி செய்வது எப்படி? இன்று நாடெங்கும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. எனவே ஆரோக்கியமான உணவை பின்பற்றி, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும். மேலும் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது … Read more

மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை.! சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது.!

சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம்  மத்திய, மாநில அரசை எச்சரித்துள்ளது. தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதி எல். நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு … Read more

நான் இன்னும் என் வார்த்தைக்கு துணை நிற்கிறேன் – முதல்வர் பினராயி விஜயன்

எல்.டி.எஃப் முன்பைவிட அதிக இடங்களைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என பிறவி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி கேரளாவில் உள்ள 140 இடங்களில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக என மும்முணைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே, … Read more

ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

மற்ற மாநிலங்களில் இருந்து கழுதைகள் கடத்தப்பட்டு ஆந்திராவில் அதிக அளவில் இறைச்சி விற்பனை நடைபெறுவதற்கு காரணம் கழுதை இறைச்சி உடலுறவு இயக்கத்தை அதிகப்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனராம். ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சி விற்பனை சில சந்தைகளில் அமோகமாக நடைபெற்று வருகிறதாம். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கழுதைகள் கடத்தப்பட்டு கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் பிரகாஷம் ஆகிய ஆந்திராவில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் … Read more

தல 62 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..??

அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் … Read more