தமிழக அரசின் பரிந்துரை நிராகரிப்பு., குடியரசு தலைவருக்கே அதிகாரம் – ஆளுநர் தரப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் முடிவு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யபட்டது. பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுமீது விசாரணை வரும் 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எழுவர் விடுதலையில் ஆளுநருக்கே அதிகாரம் … Read more

திடீரென சரிந்து விழுந்த கல்குவாரி…! உடல் நசுங்கி 2 தொழிலாளர்கள் பலி…!

உத்தரமேரூர் அருகே உள்ள மதூரில் கல்குவாரி சரிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி. உத்தரமேரூர் அருகே உள்ள மதூரில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் பாறைகளை உடைக்க வெடி பொருட்களை பயன்படுத்தி உடைப்பது வழக்கம். வெடி பொருட்களை பயன்படுத்துவதால், வீடுகள் சேதம் அடைவதாக  பொதுமக்கள் குற்றம் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அந்த கல் குவாரியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பகுதியில் இருந்த … Read more

இதுக்குமேல் சசிகலா ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் – சிவி சண்முகம்

சசிகலா வழக்கு நடத்த வேண்டுமானால், ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் நடத்த முடியும் – அமைச்சர் சிவி சண்முகம். சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால், அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, சசிகலா மீண்டும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளோம். அதிமுகவில் சசிகலா உறுப்பினர் கூட கிடையாது. … Read more

ஈஷாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக மேலும் ரூ.2.3 கோடி வழங்கிய சத்குரு..!

ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக சத்குரு மேலும் ரூ.2.3 கோடி நிதியை வழங்கியுள்ளார். அவர் ‘circa 2020′ என்ற தலைப்பில் வரைந்த 3-வது ஓவியத்தின் மூலம் இந்நிதி திரட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ‘முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் சத்குரு வரைந்த முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கும், ஈஷாவின் கம்பீரமான ‘பைரவா’ காளையின் நினைவாக வரைந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கும் ஏலம் போனது. அதன்மூலம் வந்த நிதிகளையும் சத்குரு கொரோனா நிவாரணப் … Read more

டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு.. அச்சுறுத்தல் கண்டு பின்வாங்க மாட்டேன்- கிரெட்டா காட்டம் ..!

விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரிக்கிறேன் என கிரெட்டா தன்பெர்க் ட்விட் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தி வரும் … Read more

#BREAKING: மாணவர்களுக்கு அரசு கல்லூரிக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு.!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு கறிக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆண்டு கட்டணமாக எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ. 13,610, பிடிஎஸ் படிப்புக்கு ரூ.11,610 ஆக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், எம்டி, எம்எஸ், எம்டிஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.30,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3,000, எம்எஸ்சி … Read more

சசிகலா கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பேட்டி

அதிமுக கொடியை தொண்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.  பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் காரில் அதிமுக கொடி இடம்பெற்றது  குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா … Read more

சசிகலா காரில் அதிமுக கொடி – அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார்

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சசிகலா காரில் அதிமுக கொடி :  பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தினகரன் கருத்து :  இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் … Read more

ரிஷப் பண்டுக்கு இடம்., ரஹானே பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார் – விராட் கோலி பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நாளை தொடங்கி  பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்க மைதானத்தில் … Read more

பாகுபலி 2 சாதனையை மாஸாக முறியடித்த மாஸ்டர்…!

தமிழகத்தில் பாகுபலி திரைப்படத்தின் ஷேர் சாதனையை விஜயின் மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது.  நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் தினத்தனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் … Read more