வாழைப்பழங்களை குளிர்காலத்தில் சாப்பிட வேண்டுமா? 

குளிர்காலத்தில், புளிப்பு தயிர் போன்றவற்றை நாம் தவிர்க்கிறோம். ஆனால் வாழைப்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிட முடியுமா? தெரிந்து கொள்ளுங்கள். வாழைப்பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, குளிர்ந்த வானிலை எலும்பு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். கால்சியத்தின் தினசரி டோஸ் எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், அவற்றை பலப்படுத்துகிறது. ஊட்டச்சத்து என்று வரும்போது, ​​வாழைப்பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு, ஃபோலேட், நியாசின், ரைபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற … Read more

அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- தினகரன்

தமிழக அரசு மனிதநேயத்துடனும் மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடிய போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய அரசு … Read more

கொரோனா பரவலை தடுக்க இங்கிலாந்தில் “நான்கடுக்கு” ஊரடங்கு!

இங்கிலாந்தின் வடகிழக்கு, தென்மேற்கு பகுதிகள் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் நான்கடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் … Read more

10 ஆண்டுகள் தூய்மை பணியாளராக வேலை பார்த்த அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராகியுள்ள கேரள பெண்மணி!

கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய கேரளாவின் பத்னாபுரம் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக கேரள பெண்மணி பதவியேற்றுள்ளார். 46 வயதான சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அனந்தவல்லி எனும் பெண் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர பணியாளராக கடந்த 10 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார் 6 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டு பணியாற்றிய இவருக்கு தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாழ்க்கையே மாறியுள்ளது. அவர் வேலை பார்த்த அதே அலுவலகத்தில் … Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு ! கேரள பாஜக அதிர்ச்சி

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவிக்காததால் கேரள பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.  3 புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில சட்டசபையில்   தீர்மானத்தை நிறைவேற்றினார். சபையின் சிறப்பு கூட்டத்தில் குரல் வாக்கு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்தார். கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜகவின் ஒரே ஒரு எம்எல்ஏ தீர்மானத்தை எதிர்க்கவில்லை. தீர்மானத்தின் சில வாசகங்களை … Read more

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க ரூ.1,095 கோடி ருபாய் நிதி ஒதுக்கிய பாகிஸ்தான்!

சினாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்க 1,095 கோடி ருபாய் நிதியை ஒதுக்கியது பாகிஸ்தான் அரசு. உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில், சீன அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம், 2 பிரிவுகள் தனித்தனியாக 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இதில் பெய்ஜிங்கில் தயாரிக்கப்பட்டு வந்த தடுப்பூசி, … Read more

எகிறும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு.. 2020-ல் 167 பில்லியன் டாலராம்!

உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், இரண்டாம் இடத்தில் உள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் கடந்த மாதம் 3 ஆம் இடத்தில் இருந்தார். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் அவரின் சொத்து மதிப்பு 27.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், டெஸ்லாவின் … Read more

கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் – இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார்.  குறைந்த விலையிலான நீடித்த வீட்டு வசதிக்கான ஆஷா இந்தியா திட்டத்தின் வெற்றியாளர்களையும் அறிவிக்க இருக்கும் பிரதமர், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (நகர்புறம்) சிறப்பாகச் செயல் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, நவரித் (இந்திய … Read more

இன்று முதல் இதற்கெல்லாம் 200 பேர் வரை பங்கேற்க அனுமதி

சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களில் 200 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.ஆகவே தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி … Read more