அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து!

கடந்த வருடம், நவ.21 ம் தேதி சென்னை வந்தார். அதனை தொடர்ந்து, வரும் 14-ம் தேதி மீண்டும் சென்னை வருவதாக கூறப்பட்ட நிலையில், அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், கடந்த வருடம், நவ.21 ம் தேதி சென்னை வந்தார். அதனை தொடர்ந்து, வரும் 14-ம் தேதி மீண்டும் சென்னை வருவதாக கூறப்பட்டது. இவர் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வருவதாக கூறப்பட்டது. மேலும், இந்த வருகையின் … Read more

ரேஷன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல – கமல்ஹாசன்

ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரூ.2500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் … Read more

நிபுணர்களை சீனாவுக்குள் அனுமதிக்காதது ஏமாற்றமளிக்கிறது – WHO கண்டனம்

கொரோனா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய சீனாவுக்கு செல்லவிருந்த மருத்துவ நிபுணர்களை அனுமதிக்காதது மிகுந்த ஏமாற்றம் தருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  கொரோனாவின் பிறப்பிடம் சீனவாக இருக்கும் நிலையில், இந்த வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவை WHO ஏற்படுத்தியது. 10 பேர் கொண்ட அந்த குழு இம்மாத தொடக்கத்தில் சீனாவின் உகான் நகருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது. ஆனால், சீனாவிடம் … Read more

புதுச்சேரிக்கு வந்தது 400 பேர் கொண்ட துணை ராணுவம்.! ஏன் தெரியுமா?

காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பிற்காக புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது. புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 400 பேர் கொண்ட துணை ராணுவம் வந்துள்ளது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் நாராயணசாமி இல்லத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரண்பேடியை கண்டித்து வரும் ஜனவரி 8-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் … Read more

எச்சரிக்கை ! இதை சாப்பிடாதீங்க மக்களே ; இருதய நோய் கண்டிப்பாக வரும்!

நமது முன்னோர்கள் அதிகமான ஆண்டுகள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துள்ளனர் என்றால் அதற்க்கு காரணம் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் தான். தற்போதைய நவீன காலகட்டத்தில் இருந்த இடத்துக்கே வந்து சேரும் உணவும், இரண்டே நிமிடத்தில் தயாராகும் உணவுகளும் தான் அதிகமாக நாம் உட்கொள்கிறோம். இதனால் தான் 50 வயதிலேயே மாரடைப்பு, இருதய கோளாறு, சுகர், இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு விரைவில் மரணம் ஏற்படுகிறது. அதிலும் அதிகமாக இருதய நோய்களால் தான் பலர் இறக்கின்றனர். இருதயத்தை பாதிக்கக்கூடிய … Read more

தமிழ்நாட்டில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதி.. 11 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று மேலும் 811 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,23,181 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 12,188 பேர் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 943 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8,03,328 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் … Read more

காதல் தகராறில் நடுரோட்டில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை.!

காதலின் அழைப்பின் பேரில் சந்திக்க சென்ற இளைஞரை பட்டப்பகலில் நடுரோட்டில் காதலனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 23 வயது இளைஞர், காதல் தகராறில் நடுரோட்டில் வெட்டி கொலை செய்துள்ளனர். காதலின் அழைப்பின் பேரில் சந்திக்க சென்ற இளைஞரை காதலின் உறவினர்கள் பட்டப்பகலில் சரிமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் தகராறில் … Read more

“முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்”  மாஸ்டரின் மாஸ் டையலாக் வெளியானது..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகவுள்ளது என மாஸ்டர் படக்குழு அறிவித்தது. நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. சமீபத்தில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானபோது அதில், விஜயின் டையலாக் எதுவும் இல்லை என ரசிகர்கள் … Read more

#Breaking: திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது விதிமீறல்- மத்திய அரசு!

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள்ளது விதிமீறல் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விதித்துள்ள தளர்வுகளின்படி, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், … Read more

ஜனவரி 8 முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை..!

ஜனவரி 8 முதல் 30-ஆம் தேதி வரை 5 சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் அந்நாட்டுக்கான விமான சேவையை இந்தியா நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்து.