முட்டை விலை 15 காசுகள் உயர்வு..!

இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 4.40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் … Read more

ஈரான் அணு விஞ்ஞானி கொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் – ஆயுதப்படை தலைவர்!

ஈரான் நாட்டு அணு விஞ்ஞானி மொஹ்சன் அவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் ஆயுதப்படை தலைவர் கூறியுள்ளார். ஈரானின் பிரபலமான அணு விஞ்ஞானி மொஹ்சன் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையில் இஸ்ரவேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரான் நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை வடிவமைத்த இந்த விஞ்ஞானியின் இழப்பு தங்களுக்கு மிக பெரியது என அந்நாட்டின் முக்கியமான தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் … Read more

#BREAKING : அடுத்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசியை விநியோகம்- ஹர்ஷ்வர்தன்..!

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் பேரணியை நடத்தினார்கள். டெல்லி எல்லைக்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். போலீசார் வைத்திருந்த தடுப்பை மீறி வந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பலர் கண்டணம் தெரிவிக்க தற்போது டெல்லியில் உள்ள புராரி பகுதியில் விவசாயிகள் போராட அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more

தண்ணீர் குடிச்சா உங்க எடை குறையும்.! எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்..?

ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும், இழந்த திரவங்களை நிரப்பவும் சில சிறந்த நேரங்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். ஆரோக்கியமான உடலுக்கு தண்ணீர் மிக அவசியம், உடலின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து நமது ஆரோக்கியத்தை காப்பாத்துவதற்கும் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட வழக்கமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தண்ணீர் சிறுநீரகக் கற்களை … Read more

#BREAKING: மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்.!

பிரதமர் மோடி தலைமையில் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அனைத்து கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், தற்போது கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் சாண்டி.! முக்கிய வேடத்தில் ரேஷ்மா, சரவணன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாண்டி சந்துரு இயக்கத்தில் உருவாகும் படத்தில் சாண்டி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ளார் . திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்ட பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிக்பாஸில் சாண்டியுடன் போட்டியிட்ட ரேஷ்மா மற்றும் சரவணன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.மேலும் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான ஸ்ருதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை … Read more

கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம்.. சிகிச்சையளித்த டாக்டர் வீட்டில் போலீசார் ரெய்ட்!

கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் வீட்டில் அந்நாட்டு போலீசார் சோதனை நடத்தினார்கள். உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரரான டியாகோ மரடோனா, கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார். 60 வயதான அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கட்டி காரணமாக அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த காரணமாக தனது வீட்டிற்கு திரும்பினார். அதனைதொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு … Read more

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா”.! 5 மொழிகளில் டிச.,5 வெளியீடு.!

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன்,ரன்பீர் கபூர்,ஆலியா பட், நாகார்ஜூனா,மௌனி ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் திரைப்படம் “பிரம்மாஸ்த்ரா” . சுமார் 300 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கிறது . மூன்று … Read more

#BREAKING: நாளை புரெவி புயலாக வலுப்பெறும்- வானிலை ஆய்வு மையம்..!

செய்தியாளர்களிம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், 975 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வருகின்ற 2-ஆம் தேதி மாலை இலங்கையைக் கடந்து குமாரி கடற்கரைக்கு நகரக் கூடும். இதனால், நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி … Read more

நிவர் புயலால் பாதிக்கப்பட்டபகுதியில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி சதுப்பு நிலக்காடுகளை ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதனால் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடந்தன.இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி சதுப்பு நிலக்காடுகளை ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.மேலும் … Read more