லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி..!

தீவன மோசடி வழக்குகளில் தண்டனை பெற்ற பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்தில் (ரிம்ஸ்) மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்றார். இந்நிலையில், ராஞ்சி நிறுவன இயக்குநரின் விடுதியில் சிகிக்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார்.  

நாளை இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் ஒருநாள் போட்டி! வெற்றி யாருக்கு.. ?

ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள், துபாயில் இருந்து புறப்பட்டு, ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். அங்கு கடந்த சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதன்படி ஒருநாள் போட்டி, நாளை … Read more

ஸ்ரீநகரில் 2 இராணுவ வீரர்கள் வீர மரணம்..!

இன்று ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மூன்று பயங்கரவாதிகள் எங்கள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் ஒரு காரில் தப்பிச்சென்றனர். மாலைக்குள் நாங்கள் அந்தக் குழுவை அடையாளம் காண்போம். அந்த மூன்று பேரில் இருவர் அநேகமாக பாகிஸ்தானியர்கள் என்றும் ஒருவர் உள்ளூரை சார்ந்தவர் என்று ஒரு மூத்த போலீஸ் … Read more

விஷால்-ஆர்யா படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்.!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் “Enemy” (எனிமி) படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் , ஆர்யாவிற்கு ஜோடியாக … Read more

விவசாயிகள் போராட்டம்..டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்..!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தில்லி சாலோ’ என்ற பெயரில் தில்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் குருக்ராமில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலையில் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, ஹரியானா எல்லையில் தடுப்புகளை அமைத்து காவல்துறை விவசாயிகளைத் தடுத்தனர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் கலைத்தனர். இந்நிலையில்,அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம்.! டைட்டில் என்ன தெரியுமா.?

ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு கள்வன் என்று பெயரிடப்பட்டு இன்று முதல் அதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . சமீபத்தில் இவர் இசையமைப்பில் வெளியான சூரரை போற்று படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது .மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் ,அடங்காதே,ஜெயில் உள்ளிட்ட படங்கள் ரீலீஸ்க்கு தயாராகி உள்ளது . இந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் அடுத்த படத்தினை குறித்த … Read more

பிக்பாஸ்ல உள்ள டம்மி பீசுங்களை எலிமினேட் பண்ணுங்க என்ற பரத்.!நம்ம போவோமா என்று கேட்ட தமிழ் நடிகர்.!

பிக்பாஸ் வீட்டில் உள்ள டம்மி பீசுங்களை எலிமினேட் பண்ணுங்க என்ற கூறிய பரத் அவர்களிடம் நம்ம இரண்டு பேரும் பிக்பாஸூக்கு செல்வோமா என்று நடிகர் பிரேம்ஜி அமரன் கேட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த சீசனை விட இந்த சீசன் சுவாரசியமாக இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் .சண்டை போட்டாலும் அடுத்த நிமிடம் கால்,கையை பிடித்து ஒன்று சேர்ந்து விடுகின்றனர்.நிகழ்ச்சியை குறித்து பல விமர்சனங்களை நெட்டிசன்களும் , பிரபலங்களும், … Read more

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.இதனிடையே  வரும் டிசம்பர் 1 முதல்  டிசம்பர் 31 -ஆம் தேதி வரை  பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை … Read more

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்தில் ரியல் லைஃப் தம்பதிகள் .! பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் இரண்டாவது படத்தில் ரியல் லைஃப் தம்பதிகளான நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி நடிக்கவுள்ளனர். பிரபல நடன இயக்குனரான பிருந்தா அவர்கள் “ஏய் சினாமிகா” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் . துல்கர் சல்மான், காஜல் அகர்வால்,அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது பிருந்தாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிருந்தா இயக்கும் இரண்டாவது படத்தில் … Read more

வாணி போஜனின் அடுத்த படத்தில் “சச்சின்” பட இயக்குனர்.!

வாணிபோஜன் நடிக்கும் கேசினோ என்ற அடுத்த படத்தில் சச்சின் பட இயக்குனரான ஜான் மகேந்திரன் நடிகராக அறிமுகமாகவுள்ளார் . சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம் ஆகிய படங்களில் நடித்தவர் வாணி போஜன்.தற்போது விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும் மற்றும் பல படங்களில் கமிட்டாகியுள்ள வாணி போஜன் தற்போது மார்க் ஜோல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். “கேசினோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.இந்த படத்தில் வாணி போஜனுக்கு … Read more