தாலி கட்டும் நேரத்தில், தன் காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகள்!

தாலி கட்டும் நேரத்தில், ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தனது காதலன் வந்து அழைத்து செல்வான் ஒரு மணி நேரம் பொறுங்கள் என கூறிய மணமகளால் மணமகன் மற்றும் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கும், கோத்தகிரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. அவர்களின் சமுதாய வழக்கப்படி மணமகனை தாலி கட்டுவதற்கு முன்பு பிடித்திருக்கிறதா என மூன்று முறை சாமியார் கேட்கையில் மணப்பெண் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு கேட்ட போது பிரியதர்ஷினி இரண்டு முறை அமைதியாக இருந்துவிட்டு மூன்றாவது முறை கேட்கையில் இல்லை என கூறியுள்ளார்.

மேலும், தனது காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் அவர்களை பொருட்படுத்தாமல் தன்னை அவர் காதலித்து வந்ததாகவும், அவர் வந்து தாலி காட்டுவார் ஒரு மணி நேரம் பொறுங்கள் எனவும், அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அப்பெண் கூறியதால் மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் மணப்பெண்ணின் தாயார் அடித்து அதட்டினாலும், அப்பெண் தாலி கட்டிக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் செய்வதறியாது மணமகனும் குடும்பத்தினரும் திகைத்து போய் நிற்கின்றனர்.

#IPL2020: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு !

டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர்கள் விவரம் :

பிரிதிவி ஷா , ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோயினிஸ்,  ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே,  பிரவீன் துபே  ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் (கேப்டன் ), குருனால் பாண்டியா, கோல்டர் நைல் , ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.

இதுவரை மும்பை அணி 12 போட்டிகள் விளையாடி 8 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.அதைபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 8 போட்டிகள் வெற்றியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட்டது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

யோகி பாபு படத்தில் இணைந்த திரௌபதி பட நடிகை.!

மண்டேலா திரைப்படத்தில் நடிகர் யோகிபாபுவிற்கு ஜோடியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பவர் யோகி பாபு.இவர் தற்போது “மண்டேலா” என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருக்கு ஜோடியாக “அழகிய தமிழ் மகள்” என்ற சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.

ஏற்தனவே இவர் டூலெட் , திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்ததது குறிப்பிடத்தக்கது.யோகிபாபுவின் படத்தில் தன்னுடைய கேரக்டர் அனைவருடைய மனதிலும் இடம் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும், தனக்கு கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆசை என்றும்,அதே போல் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க தயார் என்றும் சமீபத்திய பேட்டியில் ஷீலா தெரிவித்துள்ளார்.

தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் கைது!

தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வயதானவர்கள் என்றாலே பாவம் போல பார்க்கக்கூடிய காலம் போய், தற்பொழுது அவர்களையும் இரக்கமின்றி பலாத்காரம் செய்ய கூடிய கொடூரர்கள் இந்த உலகத்தில் நிறைந்துவிட்டார்கள்.

80 வயதுடைய நாகம்மாள் எனும் மூதாட்டி கணவனை இழந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் 62 வயதான பார்த்திபன் எனும் முதியவரும் வசித்து வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் இருந்த பார்த்திபன், நாகம்மாள் வீட்டில் தனியாக இருக்க கூடிய நேரம் பார்த்து, அவரது வீட்டுக்குள் புகுந்து நாகம்மாளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

பயந்து போய் அலறிய நாகம்மாள் சத்தம் வெளியில் கேட்டதால், அவரது பேரன் அங்கு வந்து பார்த்திபனை தள்ளிவிட்டு நாகம்மாளை காப்பாற்றியுள்ளார். போதையில் இருந்த பார்த்திபனை பேரன் எச்சரித்தும், உங்கள் வீட்டிலுள்ள அனைவரையும் கொன்று விடுவேன் என பார்த்திபன் மிரட்டியதால் நாகம்மாள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் பார்த்திபனை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

55 வயது பெண்ணின்10 திருமணம், 9 விவாகரத்து..இன்னும் திருமணம் செய்வேன்!

10 திருமணம், 9 விவாகரத்துக்கு பிறகும், தனக்கான ஏற்ற துணையை கண்டறிய இன்னும் திருமணம் செய்வேன் என கூறும் 55 வயது பெண்.

தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், விருப்பமில்லாமல் போனால் விவாகரத்து பெற்று கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால், 2 திருமணத்துக்கு பின் இந்த கதையா தொடர முடியாது, அவ்வாறு செய்கையில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த காஸ்ஸி எனும் 55 வயது பெண் செய்துள்ள செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. ஏனென்றால், இந்த பெண் 10 முறை இதுவரை திருமணம் செய்துகொண்டுள்ளாராம்.

விருப்பமான ஒருவரை திருமணம் செய்துகொள்வதும், பின் மனக்கசப்பு ஏற்பட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டு வேறொருவரை திருமணம் செய்துகொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இதுவரை, 8 வதாக திருமணம் செய்த ஒருவருடன் மட்டும் 7 வருடம் வாழ்ந்துள்ளாராம். மற்றவர்களுடன் எல்லாம் 2 அல்லது 3 வருடம் தான் வாழ்ந்தாராம். இதுகுறித்து, அவரிடம் கேட்கையில், தனக்கு இதனால் வாழ்க்கையில் சில சங்கடங்கள் இருந்தாலும் பல நேரங்களில் சந்தோசமாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், இன்னும் எனக்கான ஏற்ற துணையை கண்டறியும் வரை எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்ய தயார் என கூறியுள்ளாராம்.

இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை! – ராமதாஸ்

கொரோனா குறித்து இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை என்று ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கொரோனா பரவல் உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 5.73 லட்சம் பேர் பாதிப்பு. அமெரிக்காவில் தினசரி தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து, 1.01 லட்சமாக உயர்வு. பல நாடுகளில் இரண்டாவது அலை தீவிரமாக வீசுகிறது.

அலட்சியம் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும். எனவே, வெளியில் செல்லும் போது முகக்கவசம், கையுறை, சமூக இடைவெளி மிகவும் அவசியம். வீடு திரும்பியதும் கை கழுவுதல் கட்டாயம். பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கொரோனா தொற்று குறித்து, தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். எனது எச்சரிக்கைகளை பலர் செவி மடுத்தனர். சிலர் உதாசீனப்படுத்தினர். பண்டிகை மற்றும் பருவநிலையால் நிலைமை மோசமாகி வருகிறது. இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல. எச்சரிக்கை, கவனம் தேவை!’ என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.இந்த விமானம் நீரில்  இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட  சிலைக்கு மரியாதை செலுத்தினார்.இதன் பின், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள பட்டேல் சிலை இடையே  கடல் விமான சேவையை பிரதமர்  நரேந்திர மோடி பயணம் செய்து சேவையை தொடங்கி வைத்தார்.இன்று முதல் தினந்தோறும்  நீர்வழி விமானங்கள் இயக்கப்பட உள்ளது.உதான் திட்டத்தின் கீழ் இதற்கான கட்டணம் ரூ.1,500 இருந்து தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயணச் சீட்டுகளை http://www.spiceshuttle.com என்ற இணையதள முகவரியில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ் பண்ணிடாதீங்க: இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசய “ப்ளூ மூன்”!

76 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு வானில் “ப்ளூ மூன்” தோன்றவுள்ளது.

படங்களில் ஹலோவீனின் பயமுறுத்தக்கூடிய இரவு காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய நீல நிற நிலவு நாளை வானில் தோன்றவுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் எதனால் நிலா நிலவு அதாவது ப்ளூ மூன் என இது அழைக்கப்படுகிறது தெரியுமா? ஒரே மாதத்தில் தோன்றக்கூடிய இரண்டாவது பௌர்ணமி என்பதால் தான்.

அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு அக்டோபர் 31 ஆம் தேதி மீண்டும் வருகிறது. இந்த பௌர்ணமி சற்று பெரிதாக காணப்படும். இது அடிக்கடி நிகழும், இறுதியாக 2018 மார்ச் மாதம் நிகழ்ந்தது. நாம் எதிர்பார்ப்பது போல நீல நிறமாக இருக்காது.

ஆனால், இந்த முறை தோன்றக்கூடிய நிலவு நீல நிறத்துடன் காணப்படும். ஏனென்றால், இது 1944 ஆம் ஆண்டுக்கு பிறகு 76 ஆண்டுகள் கழித்து வரக்கூடிய உண்மையான நீல நிறமுடைய பெரிய பௌர்ணமி.

இன்று வந்ததற்கு பின் அடுத்த ப்ளூ மூன் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் வரும், ஆனால் இது போல நீல நிறமளிக்காது. சாதாரண கண்களால் பார்க்கும் பொழுது அவ்வளவாக தெரியாவிட்டாலும், டெலிபோட்டோ உதவியுடன் பார்க்கையில் நிச்சயம் நம்மை பிரமிக்க வைக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இரவு 8 மணிக்கு மேல் தெரியும் என கணிப்பின் படி கூறுகின்றனர்.

கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி.!

கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அதன்பின், பூங்காவை சுற்றி பார்த்த அவர், அங்கு பறவைகள் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன், கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளார்.


இதனையடுத்து, பிரமாண்ட பறவைகள் கூண்டு குறித்து கூறிய அவர், ‘இந்த உயரமான பறவைகள் கூண்டு பறவைகளை ரசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கும். கொவாடியாவுக்கு வந்து, உயிரியல் பூங்காவில் உள்ள இந்த பறவைகள் கூண்டை பாருங்கள். இது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

#BreakingNews : அமைச்சர் துரைகண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு உடல்நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது. 

தமிழக வேளாண்த்துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துரைக்கண்ணுவின் உடல்நிலை  மிகவும்  கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர் காக்கும் கருவிகளுடன் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.