#BREAKING: ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்  என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல இடங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் … Read more

#D43 தனுஷுடன் இணைந்த மாஸ்டர் பட நடிகை..!

நடிகர் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.அவரது இந்த 43வது திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது .ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.D43 பட இயக்குனரான கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் . Welcome to the team @MalavikaM_ ????@dhanushkraja … Read more

திருமணத்திற்காக மதம் மாறியதால் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

அடைக்கலம் கோரிய காதல் ஜோடிகள்  திருமணத்திற்காக மதம் மாறியதால், மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக காதல் ஜோடிகள் இருவர் தஞ்சமடைந்து, மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்கள் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், மனைவியின் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் தங்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டிருந்தாலும் அதற்க்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மணமகனின் மதத்துக்கு … Read more

#IPL2020: பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி ! போல்ட் ,பும்ரா அபார பந்துவீச்சு

மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 110 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.  இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகின்றது . இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க வீரரர்களான பிரிதிவி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார்கள் .ஆனால் தவான் … Read more

கோவா ரேஷன் கடையில் ரூ.32-க்கு விற்கப்படும் வெங்காயம்.!

கோவாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.32-க்கு விற்கப்படும் கோவா அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது . எனவே வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெங்காய பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பல இடங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், … Read more

இந்திய வம்சாவளியான 14 வயது சிறுமி எழுதிய புத்தகம் சர்வதேச அளவில் விற்பனை.!

இந்திய வம்சாவளி அமெரிக்கா சிறுமியான தியா நாத் இந்த ஆண்டு தொடக்கத்தில் Healthy Habits For a Healthier என்ற‌ புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். அந்த புத்தகத்தில் உடல்நலம், ஊட்டச்சத்து,குடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவின் நன்மைகள் பற்றிய விவரங்களை விரிவாக கூறியிருந்தார். நிர்வாண ஆரோக்கிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 12 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும், இவர் எழுதிய இந்த புத்தகம் … Read more

டெண்டர்களை விட்டு கமிஷன் அடிக்கத் துணை போகும் அதிகாரிகள் யாரும் தப்பி ஓடிவிட முடியாது- முக.ஸ்டாலின்

தரம் பற்றிய கவலையின்றி, ‘டெண்டர்களில் கமிஷன்’ என்பதே அதிமுக அரசின் ஒரே நோக்கம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ. 336 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இதனிடையே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்தது.இதனால் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையே அமைச்சர் தங்கமணி மருத்துவமனை கட்டும் பணியை ஆய்வு செய்து … Read more

கேரளாவின் 9 மாவட்டங்களில் நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 6,638 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் 5,789 பேருக்கு உள்ளூர்ப் பரவல் மூலம் நோய்த் தொற்று பரவியுள்ளது.ஆனால் மீதமுள்ள 700 பேருக்குத் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரம் தெரியவில்லை. மேலும் கொரோனாவால் நேற்று மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,457 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேராளாவின் 9 மாவட்டங்களில் ஊரடங்கு … Read more

தமிழகம் – புதுச்சேரி இடையே பேருந்து சேவை ! தமிழக அரசு அனுமதி

தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல மாதங்களுக்கு மேலாக மக்கள் சிரமப்பட்டனர்.மேலும் உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் மலர்ந்தும் மலராத காதல் இருக்கிறது – கமல்!

பிக் பாஸ் வீட்டுக்குள் அம்மா பிள்ளை சென்டிமெண்ட் மற்றும் மலர்ந்தும் மலராத காதல் ஆகியவை இருப்பதாக கூறியுள்ளார்.  இன்றுடன் 27 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சுவாரஸ்யம் குறையாமல் போட்டியாளர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். சனிக்கிழமை தோறும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் போட்டியாளர்களுடன் நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்றும் பேசவுள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் வீடு சுவாரஸ்யம் குறையாத தியேட்டர் போல தான் ஏறக்குறைய இருப்பதாக கூறிய கமல், உள்ளே மலர்ந்தும் … Read more