சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும்!

இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31-ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின் மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்பொழுது 2-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் … Read more

ஊழியர்கள் மூலமாக ட்விட்டரில் நுழைந்த ஹேக்கர்கள்..!

சமூக வலைதளங்களில் அவ்வபோது ஹேக்கர்கள் ஹேக் செய்வது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க பிரபலங்களின் டிவிட்டரில் நுழைந்த  ஹேக்கர்கள்  மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 கணக்குகளில் 45 கணக்குகள்  எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் … Read more

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் பேரில்  கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதலமைச்சர் தலைமையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.கொரோனா நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கேற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கபப்டுகிறது.மேலும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு முதலமைச்சர் ஆரோக்கியம் … Read more

எழுத்தாளர் கந்தசாமி மறைவு! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

எழுத்தாளர் கந்தசாமி மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த  எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்துலகில் பிரபலமானவர் ஆவார். இவர் தமிழ் எழுத்துலகில் , 1968ம் ஆண்டு இவருடைய ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து பிரபலமானார். இந்நிலையில், இவர்  சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும்  வருகின்றனர். இதனையடுத்து, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவரது மரண்டத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்.!

பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார். இளையராஜா தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை கோர்ப்புக ளுக்கான பணிகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செய்து வந்தார். ஆனால் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய உரிமையாளர் சாய் பிரசாத் அந்த இடத்தை விட்டு இளையராஜாவை காலி செய்ய கூறினார். பின்பு இளையராஜா தரப்பு மறுப்பு தெரிவித்து, இளையராஜா நீதிமன்றத்தில்  வழக்கு  தொடர்ந்தார், மேலும் இளையராஜா தொடர்ந்த … Read more

தலைநகரில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது!

டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,35,598 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,206 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,20,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,963 ஆக அதிகரித்துள்ளது.  … Read more

புல்லட் ரயில் திட்டம் ! நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்க வாய்ப்பு

 ஏழு புதிய வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, இந்திய ரயில்வே மற்றும்  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) ஆகியவற்றுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணியைத்  தொடங்க உள்ளது. நாட்டின் 7  புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.ரயில்வே துறை தேசிய நெடுஞ்சாலை ஆணையதிற்கு  கடிதம் எழுதியது.மேலும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான விவரங்களை வழங்கியுள்ளது.  இதனிடையே அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கூடுதல் நிலங்களை … Read more

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் இசையமைக்கிறார் தெரியுமா.!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக் வுள்ளதாக தகவல் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அதற்கு எதிர்ப்புகள் வரவே அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என தகவல் கோலிவுட்டில் பரவி வந்தன. மேலும் இந்நிலையில் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவில்லை. பயிற்சிக்காக சிறிது காலம் படப்பிடிப்பை … Read more

யுடியூப், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு! மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவு!

யுடியூப், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு. கடந்த சில வாரங்களாகவே, கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனல் மூலம், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக அந்த யுடியூப் சேனலை நிர்வகித்து வரும் சுரேந்தரன் மற்றும் செந்தில்வாசன் என்பவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், … Read more

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்

ஞாயிற்றுக்கிழமைகளில் முழுபொதுமுடக்கம் என்பதால் ஆகஸ்ட் மாதத்தில்  டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வு இன்றி தமிழகம் முழுவதும் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுபொதுமுடக்கம் என்பதால் ஆகஸ்ட் … Read more