எல்லை விவகாரத்தில் பிரதமரின் கருத்துகள் அண்டை நாடுகளுக்கு தான் பயனளிக்கும்.! ராகுல் காந்தி சாடல்.!

இந்திய எல்லை சீனாவால் ஆக்கிரமிக்கபடவில்லை. செயற்கைக்கோள் படம் உண்மையானது என பிரதமர் கூறினால் அது சீனாவிற்கு பயன் தரும் வகையில் அமைந்துவிடும் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய-சீன எல்லையான லடாக் விவகாரம் தற்போது பெரிய சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து இந்திய பிரதமர் மோடி கூறுகையில், ‘எந்த ஒரு இந்திய எல்லை பகுதியும் சீனாவினால் ஆக்கிரமிக்க படவில்லை.’ என மறுப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ … Read more

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது.!

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் வினியோகம் தொழிலாளர் நலச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி … Read more

தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 3,400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..!

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 3,460 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 77,240 ஆக உயர்ந்தது. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 3,460 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 77,240 ஆக உயர்ந்துள்ளது. அதில் 26,558 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,326 பேர் … Read more

மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 5024 பேருக்கு கொரோனா!

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 5024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 5024 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,52,765 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 208 பேர் உயிரிழந்துள்ள … Read more

சிறுவன் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர் கொன்ற பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது..!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில்இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று  திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.   இந்த தாக்குதலில் 6 வயது சிறுவன் உட்பட ஒரு  சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து , இவர்களை பிஜ்பெஹாரா மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று 6 வயது சிறுவன் மற்றும் சிஆர்பிஎஃப் கொலை  செய்த பயங்கரவாதியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த பயங்கரவாதி ஜே.கே.ஐ.எஸ் … Read more

எனக்கு கொரோனா இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனாவைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல என்று சிறப்பு மருத்துவ முகாமை இன்று தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். ராயபுரம் முழுவதும் 3,62,000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 3 மண்டலங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அப்பகுதியில் களப்பணியாற்றி வந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தன் ஆகியோரும்  அவருடன் பணியாற்றியதில் கொரோனா அச்சம் காரணமாக நானும், தனது மகனும் தனிமைப்படுத்திக் கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் … Read more

கர்நாடகாவில் 11,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..ஒரே நாளில் 445 பேருக்கு கொரோனா.!

கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 445 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,005 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,005ஆக அதிகரித்துள்ளது. மேலும் 246 பேர் இன்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 6916ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளளது … Read more

ஏறத்தாழ 220 பேர் சிறையில் மரணம்- டி.கே.எஸ் இளங்கோவன்

சிறையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று  திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன்  தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் அரசியல் ,சினிமா,விளையாட்டு என பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 2012 தொடங்கி இன்று வரை சிறைக்கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாழ 260 பேர்  உயிரிழந்துள்ளனர்.இதற்கு எந்த முறையான … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 2 பேர் பலி.!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 15 பேரும், அரசு மருத்துவமனையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, உயிரிழந்தோரின் விகிதம் 1.28 சதவீதமாக உள்ளது. இன்று உயிரிழந்தவர்களின், கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு … Read more

போலீஸ் மிருகத்தனமாக நடந்து கொள்வது ஒரு கொடூரமான குற்றம்.! ராகுல் காந்தி கடும் கண்டனம்.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து  உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்  சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் உயிரிழந்த விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், பாதுகாவலர்கள் ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான ஒன்று எனவும்  போலீஸ் மிருகத்தனமாக … Read more