ரயில்பெட்டி கொரோனா வார்டில் ஆகிசிஜன் சிலிண்டர்கள், உயிர் கழிப்பறைகள்.! வெப்பத்தை சமாளிக்க என்ன நடவடிக்கைகள்.!?

ரயில்வேயின் கொரோனா சிறப்பு வார்டு பெட்டிக்குள் ஆக்சிஜன் சிலிண்டர், உயிர் கழிப்பறைகள் ஆகியவை உள்ளன. ஆனால், அப்பெட்டிக்குள் ஊடுருவும் வெப்பத்தை குறைக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என முயற்சித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருவதால் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைத்து நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்த வேண்டியவர்களுக்கும் மருத்துவமனைகளில் இடவசதி பற்றாக்குறை காரணமாக ரயில் பெட்டிகளை கொரோனா சிறப்பு வாறுகளாக மாற்றி வருகின்றன. இந்த கொரோனா … Read more

தலைநகரில் தாண்டவமாடும் கொரோனா.! ஒரே நாளில் 3000 பேருக்கு தொற்று உறுதி.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 3000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59,746ஆக உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகிகொண்டே வருகிறது. இதுவரை அங்கு 59 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 3000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த … Read more

ரஷ்யா பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங்.!

2-ம் உலகப்போரில் ஜெர்மனியை, ர‌ஷியா வென்றது. இதன் 75-வது நினைவு தினத்தை ர‌ஷியா கொண்டாடவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ராணுவ அணிவகுப்பு மே மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த அணிவகுப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் வருகின்ற 24-ம் தேதி நடைபெறவுள்ள அணிவகுப்பை பார்வையிடு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நாளை ர‌ஷியா செல்கின்றார். சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக … Read more

டெல்லியில் ஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா.. 63 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 3,000 பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்தது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 59,746 ஆக உயர்ந்துள்ளது. அதில் 24,558 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி முதல்வர் தெரிவித்தார். மேலும், … Read more

எல்லை பிரச்னையில் நாங்கள் உதவ தயார்- டிரம்ப்!

இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னையில் நாங்கள் உதவ தயார் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்தியா-சீன வெளியுறவு … Read more

#BREAKING:அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை.!

சட்டத்துறை அமைச்சர்  சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை என அப்போலா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தொற்று இல்லை என்பது உறுதியானது என அப்போலா மருத்துவமனை கூறியுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சைக்குப்பின் டெல்லி அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

பிளாஸ்மா சிகிச்சைக்குப்பின் டெல்லி அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு  காரணமாக ராஜிவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .பிளாஸ்மா சிகிச்சைக்குப்பின் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் … Read more

#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. கொரோனாவால் ஒரே நாளில் 53 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது. … Read more

#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியது.!

சென்னையில் ஒரே நாளில் 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. அதில், 17,683 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 22,887 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 601 பேர் உயிரிழந்துள்ளனர்.

#BREAKING: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 59,000ஐ தாண்டியது

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக  2532  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 59,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 32,754 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று மட்டும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  757 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில்  1493  பேர் … Read more