மீண்டும் சின்னத்திரை சீரியல்கள் பார்க்கமுடியாது.! ஃபெப்சி தலைவரின் அதிரடி முடிவு.!

சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல்  நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், அந்த நான்கு மாவட்டங்களில் தற்போது மீண்டும் பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே தடைபட்டு சில தினங்களுக்கு … Read more

நெசவாளர்களுக்கு ஒரு நற்செய்தி.! அனைவருக்கும் ரூ.2000 நிவாரண தொகை.!

கைத்தறி மற்றும் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நெசவாளர்கள் என அனைவர்க்கும் தலா 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது அன்றாட வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது தற்போது நெசவாளர்களுக்கு நிவாரண உதவியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, … Read more

நாளை முதல் திருச்சி-செங்கல்பட்டு ரயில் நேரம் மாற்றம்.!

நாளை முதல் திருச்சி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும்  சிறப்பு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு – திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு – திருச்சி இடையே இயக்கப்படும் ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக செல்லும் இயங்கி வருகிறது. இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேரும், பின்னர் திருச்சியில் இருந்து … Read more

#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,243 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,243 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் 15,385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,17,476 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 382 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் குணமானவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டிது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 797 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 25,344 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 46,504ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 44  பேர் பலியாகிய நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 797 … Read more

#Breaking: தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. ஒரே நாளில் “44 பேர் உயிரிழப்பு”

தமிழகத்தில் கொரோனவால் இதுவரை இல்லாத அளவாக, எண்ணிக்கையாக இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா … Read more

#BREAKING: தமிழகத்தில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று.!

தமிழகத்தில் இதுவரை, 40,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,257 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. இன்று 797 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து … Read more

சேப்பாக்கம் – திருவெல்லிகோணி தொகுதி காலியானதாக அறிவிப்பு

சேப்பாக்கம் – திருவெல்லிகோணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகன் சிறுநீரகம் மற்றும் இதைய பிரச்சனை  காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.ஆனால்  ஜூன் 10-ஆம் தேதி  ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்நிலையில் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து … Read more

12 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு.!

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட  4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழக அரசு ,முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. … Read more

தனுஷ் பாடிய ஜி. வி-யின் அழகான ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் இதோ.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் வெளியாகியுள்ளது. கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த … Read more