கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்.! தண்டனை கைதிகளிடன் தில்லாலங்கடி வேலை.!

தண்டனை கைதிகளின் அறையில் உள்ள கழிவறை மற்றும் மின்விசிறிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவை கிடைத்துள்ளது. சிறையில் கைதிகளின் அறையிலும், கைதிகளிடமும் அவ்வப்போது சோதனை நடத்தி ஏதேனும் முறைகேடாக விதிகளை மீறி கொண்டுவரப்பட்டதா என சோதனை செய்வது வழக்கம்.  அப்படி, புதுசேரி, காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் சோதனை நடைபெற்றது. அப்போது தண்டனை கைதிகளிடமும், அவர்களின் அறையிலும் சோதனை நடைபெற்றது. அவர்களின் அறையில் உள்ள கழிவறை மற்றும் மின்விசிறிகளில மறைத்துவைக்கப்பட்ட செல்போன் மற்றும் செல்போன் சார்ஜர் … Read more

மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ்.!

நாளை மருத்துவர்கள் மேற்கொள்ள இருந்த கருப்பு பேட்ஜ் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டுள்ள்ளது. தமிழகத்தில் நாளை கருப்பு பட்டை அணிந்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்துவதாக தமிழக மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் பிரிசில்லா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் நடத்தபோவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும், கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், … Read more

என்டிஆரை யாரென்று தெரியவில்லை என்று கூறிய பிரபல நடிகை.! மிரட்டல் விடும் ரசிகர்கள்.!

மீரா சோப்ரா பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் அவர்களை யாரென்று தெரியவில்லை என்று கூறியதால், நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 2005ல் எஸ். ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா என்ற மீரா சோப்ரா. இந்த படத்திலுள்ள மயிலிறகே மயிலிறகே பாடல் அனைவர் மனதையும் ஈர்க்கும். அதனையடுத்து மருதமலை, காளை, இசை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து … Read more

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுடன் முகக்கவசங்கள் வழங்கப்படும்.!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்.  ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்டை  www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும், நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் … Read more

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்!

தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அவரின் உடல்நிலை கவலைக்கிடத்தில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை சென்ற கொரோனா, தற்பொழுது எம்.எல்.ஏ-வயும் விட்டுவைக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார்.  தீவிர … Read more

#Breaking: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 18,693 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.  … Read more

இரண்டாவது நாளாக சென்னையில் 1,072 பேருக்கு கொரோனா .!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று புதிதாய் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12  பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14,901  ஆக அதிகரித்தது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் … Read more

இதுவரை 14,901 பேர் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினார்கள்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 585 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 14,901 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 12  பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே … Read more

#Breaking: தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் இன்று புதிதாய் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் … Read more

நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜு

நடப்பு குறுவை சாகுபடிக்கு தேவையான 29 ஆயிரத்து 889 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, எம்ஓபி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் இருப்பில் உள்ளன. காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் பயிர் கடன் இடுபொருள்கள், உர விநியோகம் தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ … Read more