#Breaking : தமிழகத்தில் முதன் முதலாக ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.!

தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவர் தனது பிளாஸ்மாவை தனமாக வழங்கியுள்ளார் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒருவர் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனது பிளாஸ்மாவை தானமாக வழங்கியுள்ளார். தமிழகத்தில் முதன் முதலாக ஒருவர் தனது பிளாஸ்மாவை தனமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  கொரோனாவில் இருந்து குணமடைவரின் ரத்தத்தில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்திருக்கும். இதனால் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர் குறிப்பிட்ட நாளுக்கு ( … Read more

நாளை முதல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதுவை அமைச்சர் அறிவிப்பு….

வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புதுச்சேரி வாசிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில்  கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டு 3 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை புதுச்சேரியில் 4364 பேருக்கு  பரிசோதனைகள் செய்யப்பட்டு 4273 பேருக்கு கொரொனா  தொற்று இல்லை என வந்துள்ளதாகவும் , மேஉம், 74 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளதாகவும் தெரிவித்தார். நாளை முதல் … Read more

மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா.! 20 பேர் உயிரிழப்பு.!

மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவை மாநிலமாக கொண்ட மும்பையில் இன்று ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அங்கு 14,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அந்நகரத்தில் மொத்தம் பலி எண்ணிக்கை இதுவரை 528 … Read more

சிறப்பு இரயில்கள் மூலம் 4,50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர்…. அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்…

நம் நாட்டில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. என்வே பல்வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி சென்ற மற்றும் பார்த்துவரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல மிகவும் சிரமப்பட்ட நிலையில் இதற்கு மத்திய அரசு தீர்வு காண சிறப்பு இரயிலை இயக்க முடிவு செய்தது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல்  அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக குறைந்த காலத்தில் 364 … Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு 519 ஆக உயர்வு.!

கேரளாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது.  கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனா கண்டறியப்பட்ட 7 பேரில் 6 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்றும் மீதமுள்ள ஒருவர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் கூறியுள்ளார். இதனால் தற்போது … Read more

அனைத்து கிளினிக் மற்றும் நர்சிங்க் ஹோம்களை திறக்க மத்திய உள்துறை உத்தரவு….

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதும் பரவிய பெருந்தொற்றாக மறியது. இந்த தொற்று இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை. எனவே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இருக்கும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள்  இயக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள்  அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வகங்கள் … Read more

போராட்டத்திற்கு பணிந்தது என்.எல்.சி …. உயிரிழந்தோருக்கு தலா 25லட்சம் நிவாரணத்தை அறிவித்தது…

நெய்வேலி  என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் போது கொதிகலண்  வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என என்.எல்.சி, நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. தமிழகத்தின் நெய்வேலியில்  பழுப்பு நிலக்கரி மூலம், தமிழகம் மட்டுமின்றி  ஆந்திரா, கேரளா,புதுச்சேரி  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், என்.எல்.சி. அனல் மின் நிலையத்தின் 2 ஆவது அலகில் கடந்த … Read more

மீண்டும் ஆசிரியராக உருவெடுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.!

கொரோனா வைரசால் ஊரடங்கு நிலவும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், வீட்டில் இருத்தபடி பாடம் கற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசால் ஊரடங்கு நிலவும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய … Read more

அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று…

சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று  எளிதில் உலக நாடுகளுக்கு பரவியது. இந்த பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை  கைதிகள் உள்ளனர். அந்த தண்டனை கைதிகளில்  சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது 792 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அந்த சிறை ஊழியர்கள்  11 பேருக்கும்  கொரோனா வைரஸ் … Read more

கைதிக்கு கொரோனா தொற்று.! காவல்நிலையம் மூடல்.!

திருநள்ளாறு காவல் நிலையத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.  புதுச்சேரி, திருநள்ளாறு நகராட்சிக்கு உட்பட்ட சுரக்குடியை சேர்ந்த வாகன ஒட்டி ஒருவர் தகராறில் ஈடுபட்டதற்காக திருநாள்ளாறு காவலர்களால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் வசித்து வந்த கிராமம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.  மேலும், அவரை … Read more