நவீன கொள்ளைகாரனாக மாறிய அமெரிக்கா.! ரஷ்யா to தமிழகம் வரை.!

அமெரிக்காவின் கொரோனா நிலவரம் : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 503,177 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,761 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா தற்போது திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் மருத்துவ உபகரணங்களை தனது நாட்டுக்கு நூதன முறையில் மறைமுகமாக … Read more

இனி ஜியோ செயலி மூலம் நீங்களும் வருவாய் ஈட்டலாம் .!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ஜியோபோஸ் லைட் (JioPOS Lite) எனும் செயலியை அறிமுகம்படுத்தி உள்ளது. இந்த செயலியை மூலம் யார் வேண்டுமானாலும் ஜியோ பார்ட்னர் மாறி மற்றவர்களுக்கு ஜியோ ரீசார்ஜ்களை செய்ய முடியும். இந்த திட்டத்தில் மூலம் நீங்களும் வருவாய் ஈட்டலாம். இதில் எவ்வித சான்றையும்  சமர்பிக்க தேவையில்லை என ஜியோ கூறியுள்ளது.இதில் தங்களது விவரங்களை பதிவிட்டு சில ஆவணங்களை சமர்பித்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செயலி  ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் … Read more

இனி 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் இயங்க வேண்டும் – புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில்,புதுக்கோட்டை  மாவட்டத்தில், தற்போது புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதாவது , இனி வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகளை திறக்க வேண்டும் என்று ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.மேலும் உத்தரவை … Read more

36 மாவட்டங்கள் மீது கவனம் தேவை – மருத்துவ கவுன்சில்

இந்தியாவில்  உள்ள 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறு தொற்றும் கொரோனாவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள   15 மாநிலங்களில் இருக்கும் 36 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சுவாசக் கோளாறு இருக்கும் நோயாளிகளிடம்  ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வில்,  40 %  பேர் எந்த விதமான வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. மேலும் கொரோனா உள்ளவர்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த 36 மாவட்டங்களுக்கும் … Read more

தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட்கள் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டன.! – தலைமை செயலர்!

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தமிழகத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கையில் இன்று புதியதாக 58 பேருக்கு கொரோனா உறுதியாகி தற்போது தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 969-ஆக உள்ளது.  இந்த தகவல்களை தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார். அவர் மேலும், கூறுகையில், ‘ தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்றும், ‘தமிழகம் சார்பில் 4 லட்சம் ரேபிட் கிட் ஆர்டர் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 50 ஆயிரம் கிட்கள் வர உள்ளன. ‘ என … Read more

தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆக உயர்வு..மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 969 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 9,527 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் … Read more

BREAKING: தமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் கோரிக்கை .!

தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். இதையெடுத்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டம் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பிறகு தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , இன்று காலை பிரதமர் உடனான … Read more

ஈஸ்டர் தினம் – இயேசு கிறிஸ்து ஏன் மரித்தார்?

பிதாவாகிய தந்தை தூய்மையாக இருந்த நாசரேத் பெண்மணியாகிய மரியா மீது நிழலிட்டு பரிசுத்த முறையில் கரு உருவாக செய்தார். அதன் பின்பு மரியா கருவுற்று அழகிய குழந்தையான கடவுளின் குழந்தை இயேசுவை  பெற்றெடுத்தார். அவரை பெற்ற போதே யூதர்களை நிலையாக ஆட்சி செய்ய கூடியவர் இவர் தான் எனும் செய்தி அறிந்து மன்னன் ஏரோது கொள்ளுவதற்கு ஆள் அனுப்பினான். ஆனால், அவர் அதிலிருந்து மீண்டார்.  அதன் பின்பு அவர் தனக்கென 12 சீடர்களை உருவாக்கி கொண்டு தனது … Read more

இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை

நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,529-ஆகவும், 653 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர் எனவும், 242 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு.!

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் சரியாக 5 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. தற்போது அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீடிப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடப்படுகிறது.