தாயின் இறுதிச்சடங்கை வீடியோ பார்த்து அஞ்சலி செலுத்திய எஸ்.ஐ.!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் நாடு முழுவதும் இரவு ,பகல் என்று பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எஸ்.ஐ ஆக உள்ளவர் சாந்தாராம். இவர் விஜயவாடாவில் தொடர்ந்து ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது தாய்  உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். எஸ்.ஐ சாந்தாராமுவிற்கு அதிகாரிகள் விடுமுறை கொடுத்ததும் விடுமுறை வேண்டாம் என … Read more

உங்கள் காதல் பிரச்சனைகளை ஒருபோதும் தவிர்க்க நினைக்காதீர்கள்!

உங்கள் உறவை முழுமையாக வழிகாட்டுவதற்கு  எந்த புத்தகமும் இந்த உலகில் இல்லை. ஒவ்வொரு உறவுக்கும்  அதற்கென ஏற்ற தாழ்வுகள் உள்ளன. உங்கள் துணையுடன் நீங்கள் ஒரு வலுவான  பிணைப்பில் இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த வழியில் உங்கள் உறவு பயணம் போகாத சில நேரங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் உறவுக்கு சாதகமாக இருப்பது நல்லது. ஆனால் உங்கள் உறவுக்கு அதிக நம்பிக்கையுடனும் இருப்பது பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.  காதலர்கள் அல்லது தம்பதிகள் என்ற முறையில், உங்கள் பங்குதாரரின் பொருளாதார … Read more

Good News: தமிழகத்தில் சமூக தொற்று இல்லை – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 309 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 102 பேரின் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,500 எட்டியது.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,041,106 ஆகவும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,203 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து  222,332 பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸால் இந்தியாவில் நாளுக்கு நாள்  பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை வரை பாதிக்கப்பட்டவர்களின் … Read more

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கிய கரூர் எம்பி

கரூர் தொகுதி எம் பி ஜோதிமணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியுள்ளார்.  கொரோனா வைரஸால் இந்தியாவில் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பின்னர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பல தரப்பினரும் வழங்கி வருகின்றனர்.மேலும் … Read more

குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி 'குரங்காட்டம்' நடத்துகிறார் – திருமாவளவன்

இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் , இன்று லாக்டவுனின் 10-வது நாள் பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம்.மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார்.இதையெடுத்து வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு, ரூ.11,092 கோடி பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.   இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் மோசமாக காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால். அதனை கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு முதற்கட்ட பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11,092 … Read more

144 ஐ மதிக்காத தந்தையை போட்டு கொடுத்த மகன்!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவையும் அது விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஓரளவு இதன் பாதிப்பில்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில், வருகின்ற 14 ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சில பொறுப்பற்ற குடிமகன்கள் … Read more

கேரளாவில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதி.!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 2,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 157 பேர் குணமடைந்தனர்.மேலும்  கொரோனாவால்  56 பேர் உயிரிழந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா … Read more

சென்னையில் அதிகபட்சமாக 81 பேருக்கு கொரோனா.! மற்ற மாவட்டங்களில்.?!

தமிழகத்தில் இன்று மாட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309இல் இருந்து 411ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 81 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  மற்ற மாவட்டங்களான  திண்டுக்கல்லில் 43 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும், கோவையில் 29 பேருக்கும், தேனியில் 21 பேருக்கும், நாமக்கல்லில் 21 பேருக்கும்,  கரூரில் 20 பேருக்கும், செங்கல்பட்டில் 18 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும், விழுப்புரத்தில் 13 பேருக்கும், திருவாரூரில் 12 … Read more