2000 துப்பரவு தொழிலார்களின் பணி காலம் நீட்டிப்பு .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் மாநில அரசு அந்தந்த மாநிலத்தில்  கொரோனா தடுப்புக்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மருத்துவர்கள் ,செவிலியர்கள்  , காவல்துறை மற்றும் துப்பரவு தொழிலார்கள் என பலர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் பஞ்சாப்  மாநிலத்தில் இன்றுடன்  ஓய்வு பெற உள்ள 2000 துப்பரவு தொழிலார்களின் பணியை மேலும் 3 மாதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் … Read more

சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கு ரூ.200 கோடி சிறப்பு கடனுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களில் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.  அந்த வகையில் தொழில் முதலீட்டு கழகத்திடம் (TIIC) கடன் பெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் என … Read more

பிரதமர் மோடியின் தயார் ஹீராபென் நிதியுதவி! தான் சேமித்து வைத்திருந்த பணத்தை அளித்தார்!

கொரோனா  வைரஸை கட்டுப்படுத்தவும், ஊரடங்கு காலத்தில் தேவையான நிவாரண உதவிகளை செய்யவும் பிரதமர் மோடி பொதுமக்களிடம் தங்களால் இயன்ற நிதியுதவிகளை பிரதமர் நிவாரண திட்டத்திற்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார் பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவாக பலரும் தங்களால் இயன்ற சிறு, பெரு தொகைகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியும் நிதியுதவி அளித்துள்ளார். அவர் சேமித்து வைத்திருந்தா 25 ஆயிரம் பணத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார். 

தடுப்பு பணிக்கு “5 மாத சம்பளத்தை கொடுத்த” உத்தரகண்ட் முதல்வர்.!

கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதை தடுக்க பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவில் 1251 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்காக பொதுமக்கள்  நிதி கொடுக்கலாம் என கூறினார். இதைத்தொடர்ந்து தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் ,  மற்றும் … Read more

கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தினை கண்டுபித்துவிட்டதாம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதனை அளிக்கும் மருந்தையும் கண்டுபிடிக்கும் முனைப்பில் அறிவியல் வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ‘ கொரோனாவிற்கு எதிரான சிறந்த மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அந்த மருந்தை விரைவில் மனிதர்களிடம் சோதித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.’ என அந்நிறுவனம் கூறியுள்ளது.  மேலும், ‘ கொரோனாவிற்கு எதிரான இந்த ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 7000 கோடி முதலீடு செய்துள்ளோம். எனவும், இந்த மருந்தை செப்டம்பர் மாதம் … Read more

கொரோனா நிவாரண நிதிக்காக எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தில் 60 சதவீதம் குறைப்பு : மகாராஷ்டிரா அரசு அதிரடி.!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகநாடுகள் முடங்கிப்போய் உள்ளன. நம் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 7 நாட்களை கடந்துள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் இயங்காமல் இந்திய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனை கட்டுப்படுத்தவும், கொரோனா  நிவாரண நீதியாகவும் பலர் தங்களால் இயன்ற உதவிகளை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியவண்ணம் உள்ளனர்.  இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும் அம்மாநில நிதியமைச்சருமான அஜித் பவார் கூறுகையில் ‘மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி தலைவர்கள் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more

பயிர்க்கடன், சொத்துவரி போன்றவைகளுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு! – தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களில் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது பயிர்க்கடன், சொத்துவரி போன்றவை செலுத்துவது தொடர்பாக பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது.  தமிழக அரசு அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் பின்வருமாறு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தங்களது மதத்தவனையை செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தவும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.  மீன்பிடி மற்றும் கைத்தறி கூட்டுறவு … Read more

பஞ்சாபில் கொரோனா பாதிப்பு 41-ஆக உயர்வு.!

பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில், தற்போது 41-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாபில் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். மொஹாலி மாவட்டத்தின் நயகோவன் நகரத்தைச் சேர்ந்த 65 வயதான முதியவர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பஞ்சாபில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஊடங்கங்கள் தெரிவித்துள்ளது.  #CoronaVirusUpdate | 65-year-old coronavirus patient dies … Read more

கொரோனா கவசத்துடன் நூதன முறை விழிப்புணர்வு – கலக்கும் பெங்களூர் போலீசார்!

கொரோனா வைரஸின் தாக்கம் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா என பல நாடுகளில் மிகவும் அதிக அளவில் உள்ள நிலையில், இந்தியாவுக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக மருத்துவர்கள் காவலர்கள் அரசியல்வாதிகள் அனைவருமே போராடி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் சிலர் ஒத்துழைப்பு கொடுக்காமல் அந்த விதிமுறைகளை மீறிய நடக்கின்றனர். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள பெங்களூர் மாநிலத்தில் இந்த வைரஸ் குறித்த நூதன முறையில் ஆன விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். வாகனத்தில் வருபவர்களுக்கு வைரஸ் போன்ற தலைக்கவசம் … Read more

தமிழக ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்த முதலமைச்சர்

தமிழக ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்  முதலமைச்சர் பழனிசாமி . கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இந்நிலையில் தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் கொரோனா  பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து … Read more