இந்தியாவில் கொரோனோ… ஆப்பிள் ஐபோன் விற்பனைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல்…

இந்தியாவில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக  மக்கள் வீடுகளுக்குள் முடங்க்கிவரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் பாதிக்கப்படவில்லை  என தற்போது  தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐபோன் விநியோகம் சீராக வளர்ச்சியடைந்து இருக்கிறது. மார்ச் மாத நிலவரத்தை ஆய்வு செய்தால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் 17 சதவீதம் அதிகரித்தது இருந்தது.  ஐபோன் விநியோகத்திற்கு … Read more

கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால் மத்திய அரசு கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஐ எட்டியுள்ளது. அதில் 32 பேர் வெளிநாட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனவால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேரும் கேரளாவில் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 28 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், … Read more

#corona : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து இதன் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.  இந்நிலையில், கொரோனா பாதிப்பால் அனைத்து நாடுகளிலும், மக்கள் கூடுகிற இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசும் இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது கொரோனா தாக்கத்தால் தேர்தல் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள … Read more

சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம்! மத்திய அரசு அனுமதி!

முதலில் சீனாவில்  பரவி வந்த கொரோனா தொற்றுநோய், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ள நிலையில், இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 5 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து, மத்திய அரசின் அனுமதியுடன், சேலத்தின் கொரோனா பரிசோதனை மையம் துவங்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கொரோனா எதிரொலியால் தமிழக – கேரள எல்லை மூடல்!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக – கேரள எல்லையை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும், கேரளாவில் இருந்து வரும் … Read more

நாளை மறுநாள் அரசு பேருந்து இயங்காது- முதலமைச்சர் அறிவிப்பு..!

நாளை மறுநாள்  பிரதமர் மோடி அறிவித்தபடி அனைவரும் ஊரடங்கை பின்பற்றவேண்டும் என முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார்.மேலும் அன்றைய தினம்  அரசு பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்து இயங்காது  மேலும் மெட்ரோ ரயில்களும் இயங்காது எனவும்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் … Read more

சர்வதேச மகிழ்ச்சி தினம்.! வாய்விட்டு சிரிப்போம் நோயை விரட்டி அடிப்போம்.!

ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.  சர்வதேச மகிழ்ச்சி தினம் என தனியாக ஒரு நாள் கொண்டாட வேண்டுமா..? என பலருடைய மனதில் தோன்றும்.”மகிழ்ச்சி” என்ற வார்த்தையுடைய அர்த்தம் தெரியாதவர்களும் , அதை அதிகம் அனுபவிக்கதர்களும் மத்தியில் தான் இந்த கேள்வி எழும்.   தற்போது உள்ள பலர் கூறுவது, … Read more

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல் குறித்த தகவல்கள் லீக் ஆனது இணையத்தில்…

பிரபல ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை படங்கள் தற்போது  இணையத்தில் லீக் ஆகி கார் பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாது. இதில் காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரம் தெரியவந்து இருக்கிறது. அதன்படி காரின் முன்புறம் கேஸ்கேடிங் கிரில், டார்க் குரோம் பெயின்ட், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்பகள், டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்பு, புதிய வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப், இருபுறங்களிலும் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் பெரிய … Read more

அண்டை மாநில வாகனங்கள் தமிழகத்திற்கு வர தடை!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.  இந்நிலையில், நாளை முதல் மார்ச் 31ம் … Read more

பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் இயங்கி வந்த ஒரு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று 30 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துகொண்டு இருந்தபோது பட்டாசு ஆலையில் இருந்த வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த வெடி விபத்து சம்பவத்தில் 5 பேர் பலியாகிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்து, … Read more