மலேசியாவில் சிக்கித் தவித்த 150 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்த இந்திய மாணவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வருவதற்காக ஏராளமானோர் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன் வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க கட்டுப்பாடு விதித்திருந்தது. மேலும் மலேசியா அரசு அனைத்து விமானங்களையும் தடை செய்திருந்தது. இதனால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் மாணவர்கள் கோலாலம்பூரில் விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர்.  இந்த நிலையில், … Read more

மனித வாழ்வில் மகிழ்ச்சி என்னும் மலர் அனுதினமும் பூக்கட்டும்!

 பிறக்கும் போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை! ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனே பிறக்கின்றனர்! உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள நீயே முயற்சி செய்! மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி எனது மிகவும் அவசியமான ஒன்று தான். இந்த மகிழ்ச்சியை தேடி மனிதன் பல இடங்களுக்கு சென்றாலும், அந்த மகிழ்ச்சி கிடைத்தாலும் சில நிமிடங்களில் மறைந்து விடுகிறது.  ஒவ்வொரு வருடமும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி  கொண்டாடப்படுகிறது. பிறரை மகிழ்விக்கும் பலரது வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியை காண்பது மிகவும் … Read more

நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் – முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் பேச்சு.!

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன் என்றும் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம் என்று குறிப்பிட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.486 கோடி செலவில் நீரேற்று பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.  மேலும் 15 மாவட்டங்களில் … Read more

தீவிரமாகவும் கொரோனா ! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 எட்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு. கொரோனோ வைரஸை தடுக்க மத்திய ,மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று  வரை இந்தியாவில் கொரோனாவால்  151 பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.      

#Breaking: தமிழகத்தில் இரண்டாவது நபரை தாக்கிய கொரோனா வைரஸ்.!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்குமுன் தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.  #Coronaupdate: #RGGH, Chennai … Read more

கொரோனா எதிரொலி.! 60% ரயில் டிக்கெட்டை ரத்து செய்த பயணிகள்.!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை  தவிர்த்து வருகின்றன. அதனால் மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகமுழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் உலகம் முழுவதும் நேற்றுவரை 1,79111 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7426 இறந்துள்ளனர். மத்திய ,மாநில அரசுகள் கொரோனா தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் பொதுமக்கள் வருகின்ற 31-ம் தேதி வரை கூட்டம் … Read more

தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நிர்பயா குற்றவாளிகள் புதிய மனு

மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் அக்சய் மற்றும் பவன் ஆகியோர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது … Read more

கொரோனா வைரஸ் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள ட்ரம்ப்.!

கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். I will be having a news conference today to discuss very important news from the FDA concerning the Chinese Virus! — Donald J. Trump (@realDonaldTrump) March 18, 2020 அதில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை … Read more

தூக்கிலிடுவதற்கு முன் விவாகரத்து கொடுங்கள்.! நிர்பயா குற்றவாளி மனைவி.!

டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு … Read more

பேரணி, பொதுக்கூட்டங்கள் ரத்து – பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு

பேரணி, பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக  பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இந்தியாவில் கொரோனாவால் 140-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு பாஜகவினர் பேரணி, பொதுக்கூட்டம் அல்லது போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அக்கட்சியின் … Read more